undefined

 லோடு வேன் பைக் மீது மோதி  மனைவி துடிதுடித்து பலி... கணவன் கண் முன்னே சோகம்!

 

 தமிழகத்தில் திருப்பத்தூர் மாவட்டம் ஏகே.மோட்டூர்  பகுதியில் வசித்து வருபவர் 50 வயது  சிவானந்தன்.  இவரது மனைவி பழனியம்மாள்.  இவர்கள் இருவரும் இருசக்கர வாகனத்தில்  வீட்டில் இருந்து திருப்பத்தூருக்கு இறைச்சி வாங்க வந்தனர். அப்போது அனேரி அருகே உள்ள ஆண்டி வட்டம் பகுதிக்கு அருகே வந்து கொண்டிருந்த போது எதிரில் வேன் பின்னாலேயே வேகமாக வந்தது.  


இந்த வேன் ராமநாயக்கன்பேட்டை பகுதியைச் சேர்ந்த சிலர் செங்கத்திற்கு எருது விடும் திருவிழாவிற்குகாக மாட்டை லோடு வேனில்  ஏற்றிக்கொண்டு இளைஞர்கள் ஆண்டி வட்டம் பகுதியில் அதிவேகமாக சென்று கொண்டிருந்தனர். அப்போது முன்னாள் சென்று கொண்டிருந்த  சிவநாதனின் இருசக்கர வாகனத்தில் மீது அதிவேகமாக மோதியது.
இதில் கணவன் மனைவி இருவரும் தூக்கி வீசப்பட்டு பழனியம்மாள் சம்பவ இடத்திலேயே கணவன் கண்முன்னே துடிதுடித்து உயிரிழந்தார். சிவநாதன் பலத்த காயமடைந்து திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து ஏற்படுத்திய ஓட்டுநர்கள் மற்றும் இளைஞர்கள் மாட்டுடன் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.


இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த  போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இறைச்சி வாங்க திருப்பத்தூருக்கு  கணவன் மனைவி வந்த நிலையில் விபத்துக்குள்ளாகி மனைவி கணவன் கண் முன்னே உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை