undefined

லிவிங் டூ கெதர்... பச்சிளங்குழந்தையை கொன்று புதைத்த ஆண் நண்பர்!

 

லிவிங் டூ கெதர் உறவில் பிறந்த பச்சிளங்குழந்தையை கொன்று புதைத்த சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் வயநாடு அருகே உள்ள பள்ளித்தாழம் பகுதியில் வசிப்பவர் அமர் பதுர் சவுத் (45). நேபாளத்தை சேர்ந்த இவர், தனது குடும்பத்தினருடன் புலம் பெயர்ந்து கேரளாவில் வசித்து வந்தார். இவரது மகன் ரோஷன் சவுத் (20). இவரது மனைவி பார்வதி (21). இவருக்கு குறை பிரசவத்தில் 7-வது மாதத்தில் குழந்தை பிறந்துள்ளது. அந்த குழந்தை திடீரென மாயமானது.

இந்நிலையில் தனது குழந்தையை கணவர் மற்றும் அவரது பெற்றோர் தான் கொன்று புதைத்து விட்டனர் என்று போலீசில் பார்வதி பரபரப்பு புகார் கொடுத்துள்ளார். அதில், தனது கர்ப்பத்தில் கணவர் மற்றும் குடும்பத்தினர் மகிழ்ச்சி அடையவில்லை. இதனால் கருக்கலைப்பு செய்ய வற்புறுத்தினர். இதற்காக சில மருந்துகளையும் கொடுத்தனர். இதன் காரணமாகவே எனக்கு குறைபிரசவம் ஏற்பட்டது. அதன்பிறகும் அவர்கள் கோபம் குறையாமல் குழந்தையை கொன்று விட்டனர் என குறிப்பிட்டிருந்தார்.\

அதன்பேரில் போலீசார் விசாரணையில் இறங்கினர். அமர் பதுர் சவுத், அவரது மனைவி மஞ்சு, மகன் ரோஷன் சவுத் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் குழந்தையின் கழுத்தை நெரித்து கொன்று, புதைத்து விட்டதாக தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையில் பார்வதியிடம் விசாரணை நடத்தியபோது அவர், ரோஷணுடன் திருமணம் செய்யாமல் லிவ்-இன் உறவில் இருந்து வந்தது தெரியவந்தது. 

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!