undefined

தமிழகம் முழுவதும் பள்ளிகளில் ஒவ்வொரு வாரமும் இலக்கிய மன்றம், வினாடி வினா!

 

தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கு இணையான கல்வித்தரத்தை அரசுப் பள்ளிகளில் கொண்டு வர பள்ளிக்கல்வித்துறை பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில்  1 முதல் 9-ஆம் வகுப்பு மாணவர்களின் திறனை மேம்படுத்த பள்ளி அளவில் பல்வேறு போட்டிகளை நடத்த உத்தரவு பிறப்பித்துள்ளது.  

 

மாணவர்களின் படைப்புத் திறன், அறிவுத்திறன் ஆகியவற்றை வளர்க்கும் வகையில், இலக்கிய மன்றம், வினாடி வினா போன்ற மன்றங்கள் செயல்படுத்தப்படும்.
இந்தப் போட்டிகள், மாணவர்களின் மன அழுத்தத்தை குறைத்து, அவர்களின் சுய நம்பிக்கையை அதிகரிக்க வழிவகை செய்யும். மேலும், மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தவும், பள்ளிக்கு வருகை அதிகரிக்கவும் உதவும். தமிழகம் முழுவதும் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் ஒவ்வொரு வாரமும்  போட்டிகள் நடத்தப்பட வேண்டும் என கல்வித்துறை தெரிவித்துள்ளது.

 


இந்த முயற்சியின் மூலம், அரசுப் பள்ளி மாணவர்கள் தனியார் பள்ளி மாணவர்களுக்கு நிகரான திறன்களைப் பெறுவதற்கான வாய்ப்புக்கள் அதிகரிக்கும். அவர்களின் எதிர்காலம் சிறப்பாக அமையும் என்ற எதிர்பார்ப்பும்,   நம்பிக்கை உருவாகும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை