பட்டியலின பெண் ஊராட்சிமன்றத் தலைவியை காணவில்லை!! கணவர் பரபரப்பு புகார்!!

 

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில்  நாயக்கனேரி ஊராட்சி மன்ற தலைவி இந்துமதி. இவர் பட்டியலினத்தை சேர்ந்தவர். இதனால் ஊரில் வசித்து வந்த மற்ற இனத்தை சேர்ந்தவர்கள் இவரை ஊரை விட்டு தள்ளி வைத்தனர்.  அந்த ஊராட்சி மன்ற தொகுதி பட்டியல் இனத்திற்கு ஒதுக்கப்பட்ட தொகுதி என்பதால் இந்துமதி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.   மாற்றுசமூகத்தினர் பட்டியல் இனத்தை சேர்ந்தவர் ஊராட்சி மன்ற தலைவராக இருக்க கூடாது என தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இதனால் இந்துமதியை  ஊருக்குள் வரக்கூடாது எனக் கூறிவிட்டனர்.  கடந்த 2 ஆண்டுகளாகவே இந்துமதி கணவனுடன் ஊருக்கு வெளியே வசித்து வந்தார். இது குறித்த  பல்வேறு புகார்களை இந்துமதியும் அவரது கணவரும் அளித்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் இன்று இந்துமதி கணவர் பாண்டியன் ஆம்பூர் காவல் நிலையத்தில்  செப்டம்பர் 9ம் தேதி முதல் ஊராட்சி மன்றத் தலைவியும், தனது மனைவியுமான இந்துமதியை காணவில்லை என புகார் அளித்துள்ளார்.  

மேலும் அதில் கடந்த  2  ஆண்டுகளாக நாங்கள் ஊருக்கு வெளியே வசித்து வருகிறோம்.   எங்களை ஊருக்குள் வரக்கூடாது என்றும் கிராம மக்கள் தடுத்து நிறுத்திவிட்டனர். அடுத்தடுத்து மிரட்டல்கள் வந்து கொண்டே இருந்தன எனவும் இந்துமதியின்   கணவர் பாண்டியன் அந்த புகாரில் குறிப்பிட்டுள்ளார். இந்த புகாரின் பெயரில் இந்துமதியை தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை