எல்ஐசி இணையதள இந்தி சர்ச்சை... மீண்டும் ஆங்கில மொழிக்கு மாற்றம்!
இந்திய பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி நிறுவனத்தின் இணையதள பக்கம் இதுவரை ஆங்கிலத்தில் தான் செயல்பட்டு வந்தது. மொழி தேர்வில் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகள் இருக்கும். அதில் தேவை இருப்பின் இந்தி மொழி தேர்வு செய்து கொள்ளும்படி அமைக்கப்பட்டிருக்கும். ஆனால், இன்று காலை முதல் LIC இணையதளம் முழுக்க இந்தி மொழியில் மட்டுமே செயல்பட்டு வருகிறது.
மொழி தேர்வு செய்யும் பட்டன் தேர்வும் இந்தி மொழியில் இருந்ததால், மொழி மாற்றம் செய்வதும் இந்தி தெரியாத மற்ற மொழி பேசும் மக்களுக்கு பெரும் சவாலானதாக அமைந்தது.பொதுத்துறை காப்பீட்டு நிறுவனத்தின் இணையதளம் முழுக்க இந்தி மயமானாதால், மற்ற மொழிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என பரவலாக விமர்சனங்களும் எழுந்துள்ளன.
இது குறித்து LIC தரப்பு “LIC இணையதள பக்கத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதாகவும், அதனை சரி செய்து வருவதாகவும், இன்னும் சில மணி நேரங்களில் இப்பிரச்னை சரியாகி மீண்டும் ஆங்கிலத்தில் முகப்பு பக்கம் தெரியவரும். அதே போல இந்தி தவிர்த்து பிராந்திய மொழிகளில் LIC தளம் இயக்கவும் பணிகள் மேற்கொண்டு வருகிறோம்” என விளக்கம் அளித்துள்ளது. தற்போது மீண்டும் ஆங்கிலத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எல்.ஐ.சி. இணையதளம் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளதால் பயனர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!