undefined

ஃபேமிலியா போய் தான் திருடுவோம்.. பயணிகளை அதிர வைத்த தாய், மகள்கள்.. அதிர்ச்சி பின்னணி!

 

விழுப்புரம் கண்டமங்கலத்தைச் சேர்ந்த ஷீலா என்பவர் பேருந்தில் விழுப்புரம் சென்றுள்ளார். பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்ததால், கையில் இருந்த கைப்பையை பேருந்தில் அமர்ந்திருந்த பெண்ணிடம் கொடுத்தார். அப்போது பேருந்தில் அமர்ந்திருந்த பெண் பையில் இருந்த 2000 ரூபாயை எடுத்ததை பார்த்த ஷீலா, பையில் இருந்த பணத்தை ஏன் எடுத்தீர்கள் என்று கேட்டுள்ளார்.

பணம் எடுக்கவில்லை என்று கூறி சமாளித்துள்ளார். இதையடுத்து, பாதிக்கப்பட்ட ஷீலா, பணத்தை எடுத்த பெண்ணிடம் சண்டையிட்டு, ராதிகாவை விழுப்புரம் காந்தி சிலையில் இருந்து கீழே இறக்கி, போலீசில் ஒப்படைத்தார். இதைத்தொடர்ந்து போலீசார் ராதிகாவை நகர காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில்  ராதிகா அவரது இரட்டை மகள்கள் மகேஸ்வரி மற்றும் அனிதாவுடன் கூட்டமாக இருக்கும் பேருந்தில் ஏறி பயணிகளின் பையை பத்திரமாக வைத்துக்கொள்வதாக கூறி பணம் நகை திருடுவதை வழக்கமாக வைத்துள்ளனர் என தெரிய வந்துள்ளது.

இதையடுத்து திருவண்ணாமலையைச் சேர்ந்த 3 பேரையும் நகர போலீஸார் கைது செய்து அவர்கள் மீது திருட்டு வழக்குப் பதிவு செய்தனர். மேலும், பண்ருட்டி, மரக்காணம், திண்டிவனம், திருவண்ணாமலை ஆகிய காவல் நிலையங்களில் 3 பேர் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் உள்ளன என கண்டுபிடிக்கப்பட்டது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!