“எதிர்கொள்வோம்.. எதிரி கொல்வோம்..” வைரலாகும் கங்குவா டிரெய்லர்.. ரசிகர்கள் கொண்டாட்டம்!
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியாக உள்ள திரைப்படம் ‘கங்குவா’. மாபெரும் பொருட் செலவில் உருவாகியிருக்கும் கங்குவா படத்தை ஸ்டுடியோ க்ரீன் K.E.ஞானவேல் ராஜா, யுவி கிரியேஷன்ஸ் வம்சி புரோமோத்துடன் இணைந்து தயாரித்துள்ளார். இந்தப் படத்திற்கு வெற்றி பழனிச்சாமி ஒளிப்பதிவு செய்கிறார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள இப்படத்தின் படத்தொகுப்பை நிஷாத் யூசுப் கவனித்து வருகிறார். இதில் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உட்பட பலர் நடிக்கின்றனர்.
வெற்றி ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படம் 3டி முறையில் சரித்திர படமாக உருவாகியுள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியாகி கவனம் பெற்றது. ‘கங்குவா’ படத்தை கடந்த மாதம் 10-ம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்த நிலையில், ரஜினியின் ‘வேட்டையன்’ திரைப்படம் அந்த நாளில் வெளியானதால் படத்தின் ரிலீசை தள்ளி வைத்தனர். ‘கங்குவா’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், சைனீஸ், ஸ்பானிஷ் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியாக உள்ளது.
இதையடுத்து ‘கங்குவா’ திரைப்படம் வருகிற 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்தது. இந்த நிலையில் படத்தின் ரிலீஸ் டிரெய்லர் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. தற்போது ‘கங்குவா’ திரைப்படத்தின் ரிலீஸ் டிரெய்லர் வெளியாகியுள்ளது. தற்போது இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!