undefined

உறைபனியில் கண்கள் மிரள, ரத்தம் தெறிக்க   ’லியோ ’ த்ரிஷா..!!

 

நடிகர் விஜய்யின் நடிப்பில் விரைவில் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.  ‘லியோ’  . இந்தப் படத்தின் டிரெய்லர் இன்று மாலை வெளியாக இருக்கிறது. படத்திற்கு யூ/ஏ சர்டிஃபிகேட் கிடைத்துள்ளது. லியோ படத்தின் காட்சிகள் ஒவ்வொன்றும்  வன்முறையையும் சண்டைக்காட்சிகளையும் முன்னிறுத்துகின்றன.  இதனை ஒவ்வொரு அறிவிப்பிலும் படக்குழு உறுதிப்படுத்திக் கொண்டே இருக்கிறது.

அந்த வகையில்,   தணிக்கை சான்றிதழுக்கான போஸ்டர் கூட ரத்தம் தோய்ந்தது போல சிவப்பு நிறத்தில் இருந்தது. லியோ படத்தில் முதல் முறையாக நடிகை த்ரிஷாவின் போஸ்டரை படக்குழு டிரெய்லர் நாளான இன்று வெளியிட்டுள்ளது.

லோகேஷ் கனகராஜ் தனது ‘லியோ’ கதாநாயகியான த்ரிஷாவை ரத்தம் தெறிக்க, கண்கள் பயத்தில் மிரள, அதிர்ச்சியில் காஷ்மீரில் உறைந்து நிற்கும் த்ரிஷாவைதான் போஸ்டரில் அறிமுகப்படுத்தியுள்ளார்.   இந்த படத்தின் மூலம்   ‘லியோ’ படம் எப்படி இருக்கும் என்பதை கணிக்க முடிகிறது எனவும், ‘கில்லி’ படத்தில் பார்த்த த்ரிஷா போல இருக்கிறார் எனவும் ரசிகர்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!