undefined

அதிர்ச்சி... ‘லியோ’ பட நடிகரின் குடும்பத்தினர் விபத்தில் சிக்கி  உறவினர் பலி; பெற்றோர் படுகாயம்! 

 
 

நடிகர் விஜயின் நடிப்பில் வெளியான ‘லியோ’ படத்தில் அவரது மகனாக நடித்த நடிகர் மேத்யூ தாமஸ் குடும்பத்தினர் சாலை விபத்தில் சிக்கி படுகாயமடைந்துள்ளனர். இந்த விபத்தில் நடிகர் மேத்யூ தாமஸின் உறவினர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகி இருக்கிறார். ‘லியோ’ படத்தை அடுத்து நடிகர் மேத்யூ தாமஸ் தனுஷ் இயக்கி வரும்  ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்?’ படத்திலும் நடித்துள்ளார். கேரளாவைச் சேர்ந்த இவர், மலையாள படங்களிலும் நடித்து வருகிறார். 


இந்நிலையில், அவரது குடும்பத்தினர் சாலை விபத்து ஒன்றில் சிக்கி படுகாயமடைந்துள்ளனர். மேத்யூவின் பெற்றோர் சூசன்,பிஜு, அண்ணன் ஜான் மற்றும் குடும்ப உறவினர்கள் அனைவரும் நேற்று கொச்சியில் உறவினர் ஒருவரின் இறுதி சடங்கில் கலந்து கொள்வதற்காக காரில் சென்றுள்ளனர். இறுதிச்சடங்கு நிகழ்வில் பங்கேற்று விட்டு திரும்பும்போது, சாஸ்தாமுகல் தேசிய நெடுஞ்சாலையில் மேத்யூ தாமஸ் குடும்பத்தினர் சென்ற கார் மதியம் ஒரு மணியளவில் விபத்தில் சிக்கி உள்ளது. இதில் மேத்யூ தாமஸின் உறவினர் ஓய்வு பெற்ற ஆசிரியரான பீனா டேனியல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.


மேத்யூவின் அண்ணன் ஜான் காரை ஓட்டிச் சென்றிருக்கிறார். அவர் லேசான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வருகிறார். மேத்யூவின் பெற்றோர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!