undefined

’ லியோ 2’ அப்டேட் கொடுத்த லோகேஷ் கனகராஜ்!

 

 நடிகர் விஜய்  நடிப்பில் வெளியான லியோ படம் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. தற்போது தீபாவளிக்கு கவின் நடிப்பில் வெளியான படம் பிளடி பெக்கர். இயக்குனர் நெல்சன் திலீப் குமாரின் பிலமென்ட் பிக்சர்ஸ் தயாரிப்பில் இந்த படம்  உருவானது.  

இந்த படத்தை அவரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த  சிவபாலன் முத்துக்குமார் இயக்கத்தில் தயாரானது.  இதில் ரெடின் கிங்ஸ்லி, மாருதி பிரகாஷ்ராஜ், சுனில் சுகாதா, அக்சயா ஹரிஹரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்நிலையில், பிளடி பெக்கர் திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் படக்குழுவினருடன் திரையரங்கிற்கு சென்று பார்த்தார். இந்தப் படத்தை பாராட்டியதோடு மட்டுமில்லாமல் லியோ 2 குறித்த அப்டேட்டும் கொடுத்துள்ளார்.  

பிளடி பெக்கர் திரைப்படத்தை பார்த்த பின்னர் லோகேஷ் கனகராஜிடம்  லியோ 2 குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.  அதற்கு அவர் 'அதை விஜய் அண்ணாதான் சொல்லவேண்டும். அவர் சரி சொன்னால் கண்டிப்பாக லியோ 2 வரும்' எனக் கூறியுள்ளார்.  

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!