ஆப்பிளுக்கு போட்டியாக விலையேறிய  எலுமிச்சை...  புலம்பும் இல்லத்தரசிகள்!

 
 தமிழகத்தில் மார்ச் மாதம் முதலே கோடை வெயில் கொளுத்தி வருகிறது. பொதுமக்கள் தங்களை வெயிலிலிருந்து காத்துக்கொள்ள  பழங்கள், ஜூஸ் வகைகளை சாப்பிட்டு வருகின்றனர். அந்த வகையில்  ஆப்பிள், ஆரஞ்சு, கொய்யா, சப்போட்டா, சாத்துக்குடி, கிர்ணி, டிராகன் பழங்களை விரும்பி வாங்குகின்றனர்.அதே நேரத்தில்  இளநீர், தர்ப்பூசணி, எலுமிச்சையையும்  வாங்குவதில் ஆர்வம் காட்டி  வருகின்றனர்.


ஒரே ஒரு எலுமிச்சை பழத்தை பிழிந்தால் போதும். வீட்டில் அனைவருமே ஜூஸ் போட்டு குடிக்கலாம். மிக  எளிதில் கிடைக்கும் பொருள் என்பதால் அதற்கு எப்போதும் வரவேற்பு அதிகம். அதே நேரத்தில் உடல் சூட்டை தணிப்பதில் வகிக்கும் எலுமிச்சம் பழத்திற்கான தேவை அதிகரித்துள்ளன. குறிப்பாக சிவகங்கை மாவட்டத்தில் கிலோ ரூ200 ஆக  உயர்ந்துள்ளது.    


ஒரு கிலோ ரூ60  முதல் ரூ80 வரை விற்பனையான எலுமிச்சம்பழம் தற்போது ரூ 160 லிருந்து  ரூ 200 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சாலையோரம் குவித்து வைத்து கூவிக்கூவி அழைத்தாலும், கேட்பாராற்று இருந்த எலுமிச்சைப் பழத்தின் விலை, கோடை வெயில் எதிரொலியாக அதிகரித்திருக்கிறது.ஆப்பிள் பழத்தின் சில ரகங்கள் ஒரு கிலோ ரூ100 முதல் 120 ஆக நிலையில், எலுமிச்சை பழம் கிலோவுக்கு ரூ200 ஆக உயர்ந்துள்ளது.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!