undefined

 டிசம்பர் 9ம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆரம்பம்...சபாநாயகர் அப்பாவு !

 
 

தமிழகத்தில்  சட்டமன்றப் பேரவையின் அடுத்தக் கூட்டத் தொடர் டிசம்பர் 9ம் தேதி   காலை 9.30 மணிக்கு, சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறும் என சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார். இது குறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில்  தமிழக சட்டசபை கூட்டத்தொடர் கடந்த ஜூன் மாதம் 20 ம் தேதி கூடியது. முதல் நாளில் மறைந்த எம்.எல்.ஏ.க்களுக்கு இரங்கல் குறிப்புகள் வாசிக்கப்பட்டு அவை நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்பட்டன.

ஜூன் 21 ம் தேதியில் இருந்து அரசுத் துறை மானியக் கோரிக்கைகள் மீது எம்.எல்.ஏக்களின் விவாதம், அமைச்சர்களின் பதிலுரை, 55 மானியக் கோரிக்கை மீது வாக்கெடுப்பு ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஜூன் 29ம் தேதி வரை 9 நாட்கள் காலையிலும், மாலையிலும் சட்டப்பேரவை கூடியது.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவம் தொடர்பாக சட்டசபையில் அதிமுகவினர் அமளி செய்ததை அடுத்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உட்பட அதிமுக எம்.எல்.ஏக்கள் அனைவரும் கூட்டத்தொடரில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். பின்னர் அவை முன்னவரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் தீர்மானம் ஒன்றைக் கொண்டு வந்தார். அதன்படி  அ.தி.மு.க.வினர் நீக்கி வைக்கப்பட்து கூட்டத்தொடர் என்றில்லாமல், கூட்டம் என்று மாற்றிக் கொள்ளலாம் என முதல்வர்  கேட்டுக்கொண்டுள்ளதால்  அந்த தீர்மானம் நிறைவேறியது எனக் கூறியுள்ளார்.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!