undefined

பிரபல பாடகி  பத்மபூஷண் சாரதா சின்கா காலமானார்... பிரதமர் மோடி இரங்கல்!

 

பத்மபூஷண் விருது பெற்ற பிரபல போஜ்புரி பாடகியும், நாட்டுப்புற கலைஞருமான சாரதா சின்கா உடல்நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சைப் பலனளிக்காமல் காலமானார். அவருக்கு வயது 72.

பீகாரைச் சேர்ந்த சாரதா சின்ஹா, தன் நாட்டுப்புறப் பாடல்களால் மக்களை பெரிதும் கவர்ந்தவர். போஜ்புரி மற்றும் மைதிலி மொழிகளில் இவர் பல நாட்டுப்புறப் பாடல்களை பாடியுள்ளார். நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம பூஷண் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.

கடந்த 2017ம் ஆண்டு பாடகி சாரதா சின்ஹாவுக்கு புற்றுநோய் பாதிக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து அதற்கான சிகிச்சைகளை மேற்கொண்டு வந்தார். இந்நிலையில், திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவமனையில் செயற்கை சுவாசத்தின் உதவியுடன் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று நள்ளிரவு காலமானார். பாடகி சாரதா சின்ஹா மறைவிற்கு பிரதமர் மோடி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!