undefined

வாய்பிளக்கும் தலைவர்கள்... திமுக, அதிமுகவுக்கு பாடம் சொல்லித் தரும் விஜய் மாநாடு... கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

 

“எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை... ஆனா ஒரு அரசியல் கட்சி மாநாடு நடத்தினால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று பிற கட்சிகளுக்கு இது ஒரு பாடமாகவும் இருக்க வேண்டும். நாம நடத்துகிற முதல் மாநாடு. முதல் அடியை சரியா எடுத்து வைக்கணும். ஆமாம்... முதல் அடியிலேயே நாம யாருன்னு எதிராளிக்குத் தெரியணும்” இது ஏதோ சினிமா வசனம் போல இருக்கு தானே?  இது தான் புஸ்ஸீ ஆனந்திடம் மாநாடு குறித்து கேட்கும் போதெல்லாம் விஜய் தவிர்த்து வந்த போது சொன்ன வார்த்தைகள். அதனால கொஞ்ச நாள் போகட்டும் என்று தவிர்த்து வந்த விஜய், மாநாடுக்கு தேதி குறிச்ச பின்பு வேகமெடுத்தது பணிகள்.

ஒவ்வொரு தொண்டனும் எப்படி சந்தோஷமா மாநாட்டில் கலந்துக் கொள்ள வர்றாங்களோ அதைப் போலவே மாநாடு முடிந்து வீட்டிற்கும் சந்தோஷமாக திரும்ப வேண்டும். அவங்களுக்கு எந்த சங்கடமும் இருக்க கூடாது.. அவங்க பாதுகாப்பு ரொம்பவே முக்கியம் என்று கறார் காட்டி பல விஷயங்களைத் தவிர்த்து, புஸ்ஸீ ஆனந்த் கூறிய அதிரடி ஐடியாக்களுக்கு எல்லாம் தடையும் போட்டிருக்கிறார். ஆனாலும் விஜய் டிக் செய்தது, தனியே சொன்ன ஐடியாக்கள் என்று மாநாடு களைகட்டுகிறது. 

நாளை  மறுதினம் மாநாடு நடைபெற உள்ள இடத்தில் 85 ஏக்கர் பரப்பளவில் மாநாட்டு திடல் அமைக்கப்பட்டிருக்கிறது. பகுதி முழுவதும் புல் தரை. விஜய் உள்ளிட்ட பிரபலங்கள் மாநாட்டு மேடைக்குச் செல்ல தனி வழி. அந்த பகுதியில் உள்ள கிணறு முழுவதும் இரும்பு ஷீட்களால் மூடப்பட்டிருக்கிறது. அதன் பலத்தையும் பரிசோதித்திருக்கிறார்கள். பின்பக்கம் ரயில்வே தண்டவாள பகுதி இருப்பதால் அந்த பகுதிக்குள் சென்று விடாதவாறு முழுவதும் இரும்பு காம்பவுண்ட் என்று ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டுள்ளன.

தமிழகமே திரும்பி பார்க்கணும். நம்முடைய கொள்கைகள் முழுசா பரவணும் என்று திட்டமிட்டு வருகிறார்கள். பாப்பனப்பட்டு கிராமத்தில் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையின் ஓரத்தில் விஜய் உருவத்துடன் ராட்சத பலூன்கள் பறக்கவிடப்பட்டுள்ளன. இந்த பலூன்கள் மாநாட்டிற்கு வருபவர்களை வரவேற்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் பல்வேறு இடங்களில் மாநாட்டிற்கு வரவேற்று சுவர் விளம்பரங்களை அமைத்து வருகின்றனர். 

மாநாட்டு திடல் பகுதியில் பெண்கள், ஆண்கள் மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் அமருவதற்கு தனித்தனியாக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. தொண்டர்கள் அமர்ந்திருக்கும்  இடத்தில் 300 மொபைல் பயோ டாய்லெட் அமைக்கப்பட்டிருகிறது. 300 குடிநீர் வாட்டர் டேங்க் அமைத்துள்ளார்கள். இதே போன்று 50,000 இருக்கைகள், புல் தரைகள் மீது கிரின் மேட் அமைக்கும் பணியும் முடிந்து விட்டது. பெரியார், அம்பேத்கர் துவங்கி இன்னும் பல தமிழ் தலைவர்களின் படங்களும் கட் அவுட்களாக தயாராகி வருகிறது. மாநாட்டு திடல் முழுவதையும் முழு 3டி வடிவில் விஜய்யிடம் காட்டி, எங்கே யார் யார் படம் வரவேண்டும், எங்கிருந்து எண்ட்ரி என்பது முதல் எத்தனை மணிக்கு மாநாடு கூட்டம் முடிவுறும், எப்படி அனைவரும் சீக்கிரமாக வீடு திரும்புவார்கள் என்பது வரை பக்கா திட்டமிடல்.

ஏதோ கூட்டத்தைக் கூட்டிவிட்டு, மாஸ் காட்டினோம் என்றில்லாமல், அத்தனை கச்சிதமான திட்டமிடல். அதே சமயம் மிகப் பெரும் திருவிழாவுக்கு தயாராகி வருகிறது தவெக. நிஜத்தில் திமுக, அதிமுக உட்பட தமிழக அரசியல் தலைவர்கள் விஜய் மாநாடு ஏற்பாடுகள் குறித்து கேள்விப்படுகிற விஷயங்களால் பதறித்தான் போயிருக்கிறார்கள் என்கிறது களநிலவரம். இரண்டு அரசியல் தலைவர்கள் யதேச்சையாக சந்தித்துக் கொள்கிற போது விஜய் மாநாடு பற்றித்தான் பேச்சாக இருக்கிறது. விஜய் இதை தக்க வைக்கிறாரா என்பதைக் காலம் தான் நிர்ணயிக்கும்.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!