undefined

’வழக்கறிஞர்களுக்கு சரியான ஊதியம் அளிக்க வேண்டும்’.. தலைமை நீதிபதி வேண்டுகோள்!

 

வழக்கறிஞர்கள் தங்கள் ஊழியர்களுக்கு முறையாக ஊதியம் வழங்க வேண்டும் என்று தலைமை நீதிபதி சந்திரசூட் கூறினார். இளம் வழக்கறிஞர்கள் தங்கள் ஆரம்பகால வழக்கறிஞர் வாழ்க்கையில் எதிர்கொள்ளும் சவால்கள் அவர்களின் எதிர்காலத்திற்கு நல்ல அடித்தளத்தை அமைக்கும் என்று தலைமை நீதிபதி சந்திரசூட் கூறினார்.

இதுகுறித்து அவர் அகில இந்திய வானொலிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது; “எந்தவொரு தொழிலிலும் ஏற்ற தாழ்வுகள் இருக்கும். அதுபோல, வழக்கறிஞர் தொழிலில் முதல் மாத சம்பளம் மிக அதிகமாக கிடைக்காது.இளம் வழக்கறிஞர்கள் தங்கள் ஆரம்பகால வழக்கறிஞர் வாழ்க்கையில் எதிர்கொள்ளும் சவால்கள் அவர்களின் எதிர்காலத்திற்கு நல்ல அடித்தளத்தை அமைக்கின்றன.

மூத்த வழக்கறிஞர்கள் இளம் வழக்கறிஞர்களை ஊக்குவிக்க வேண்டும். வழக்கறிஞர்கள் தங்கள் ஊழியர்களுக்கு முறையாக ஊதியம் வழங்க வேண்டும். இளைஞர்கள் கற்க வருகிறார்கள். அதே சமயம் அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது. எனவே இது இரு தரப்பினருக்கும் சாதகமாக அமையும் என்பதை மூத்த வழக்கறிஞர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றார் சந்திரசூட்.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!