undefined

பெண்களே உஷார்... ஜிம்முக்குப் போறீங்களா?  ஸ்டீம் பாத் எடுத்த இளம்பெண்ணுக்கு விரல்கள் அகற்றம்!

 

மதுரை மாவட்டம் அச்சம்பத்து பகுதியைச் சேர்ந்தவர் கவிதா(பெயர் மாற்றப்பட்டுள்ளது). 28 வயதான இவர் வழக்கறிஞராக உள்ளார். இவருக்கு திருமணமாகி, 5 வயதில் மகன் உள்ளார். 

இந்நிலையில் ஹார்மோன் பிரச்சனையால் அடிக்கடி உடல்நலம் பாதிக்கப்பட்ட கவிதா, மருத்துவர்களின் ஆலோசனைப்படி உடற்பயிற்சி செய்ய மதுரை பைபாஸ் சாலையில் உள்ள 'தி கிளப் 19' என்ற உடற்பயிற்சி கூடத்தில் கடந்த பிப்ரவரி 19ம் தேதி சேர்ந்தார். இந்த உடற்பயிற்சி கூடத்தை கெளதம் என்பவரும், அவரது சகோதரர் அசோக் என்பவரும் இணைந்து நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் உடற்பயிற்சிக் கூடத்திற்கு ஒரு மாதம் தொடர்ச்சியாக கவிதா சென்று வந்துக் கொண்டிருந்த நிலையில், உடற்பயிற்சிக்கு பின், நீராவி குளியல் எடுத்தால் உடலுக்கு நல்லது என, கூறியுள்ளனர். இதை நம்பி கண்ணாடி அறையில் உடற்பயிற்சிக்குப் பின்னர் கவிதா நீராவி குளியல் எடுத்த போது, அசோக் மனைவி பிரியா, ஒரு திரவத்தை ஊற்றச் சொல்லி விட்டு, அந்த இடத்தை விட்டு நகர்ந்து சென்றுள்ளார். சிறிது நேரத்தில் அதிக வெப்பத்தால் கவிதாவின் கைகள் வெந்து போகும் சூழல் ஏற்பட்டதால், அலறியபடியே கண்ணாடி அறையை உடைத்துக் கொண்டு வெளியேறி கவிதா உயிர் தப்பினார். 

அதன் பின்னர் அங்கு வந்த ஜிம் உரிமையாளர் அசோக்கின் மனைவி பிரியா, கவிதாவை உடனடியாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தார். கவிதாவைப் பரிசோதித்த டாக்டர்கள், 'இரு கைகளையும் அகற்ற வேண்டும்' என்று கூறியுள்ளனர். 

அதிர்ச்சியடைந்த கவிதா அங்கிருந்து மற்றொரு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அந்த மருத்துவமனையில் விரல்களை அகற்ற வேண்டியிருக்கும் எனக்கூறி உள்நோயாளியாக கவிதாவை அனுமதித்துள்ளனர். மருத்துவமனையில் தொடர் சிகிச்சைக்கு பல லட்சம் ரூபாய் செலவு செய்து, பிளாஸ்டிக் சர்ஜரி செய்த நிலையில் கைவிரல்கள் முன்பு போல இயங்குவதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது.

இது குறித்து கவிதா போலீசில் புகார் செய்தார். ஜிம் உரிமையாளர் கெளதம் மற்றும் அசோக், அவரது மனைவி பிரியா ஆகியோர் மீது எஸ்.எஸ்.காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரித்து வருகின்றனர்.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!