லட்டு சர்ச்சை.. விரதம் இருந்து திருப்பதி மலை ஏறிய பவன் கல்யாண்.. வெட வெடத்து போனதால் அதிர்ச்சி!
திருப்பதி லட்டு சர்ச்சை நாட்டையே உலுக்கி வரும் நிலையில், ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண் இந்த விவகாரத்தை தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ளார். இந்த அசுத்தத்திற்கு பரிகாரமாக திருப்பதி கோவிலை சுத்தம் செய்தார். மேலும், பரிகாரமாக 11 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து திருமலைக்கு யாத்திரை செல்வதாக பவன் கல்யாண் அறிவித்தார்.
உடல் முழுவதும் வியர்வையில் நனைந்திருந்த பவன் கல்யாண் வழியில் அங்கும் இங்கும் அமர்ந்து பயணத்தைத் தொடர்ந்தார். பவன் கல்யாணுடன் வந்த குழுவினர் தண்ணீர் பாட்டிலை திறந்து அவருக்கு உதவினார்கள். மேலும், அவருக்கு வியர்க்காமல் இருக்க விசிறியை வைத்து விசிறி சென்றனர். திருமலைக்கு நடந்து செல்ல சுமார் 3500 படிகளையும் சில செங்குத்தான பாதைகளையும் கடக்க வேண்டும். பவன் கல்யாண், அங்கும் இங்கும் நின்று உட்கார்ந்து நடக்க முடியாமல் நடந்தார். மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் பவன் கல்யாண் திருமலைக்கு நடந்து செல்லும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
முன்னதாக திருப்பதி லட்டு விவகாரம் தொடர்பான வழக்கு கடந்த திங்கள்கிழமை உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, லட்டுவில் நெய் கலப்படம் குறித்து தெளிவான ஆய்வு அறிக்கை இல்லை என்றும், அதை ஏன் அரசியல் ஆக்குகிறீர்கள் என்றும் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. மேலும் சந்திரபாபு நாயுடு கடவுளை அரசியலாக்க வேண்டாம் என்றும், எந்த ஆதாரத்தின் அடிப்படையில் மாட்டு கொழுப்பை கலந்ததாக பொதுவெளியில் கூறியதாகவும் உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
நவராத்திரி... வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு இதை கொடுத்தால் செல்வம் சேரும்!