சிசிடிவி இல்லாததால் துணிகரம்.. 6 சவரன் தங்க செயினை பறித்து சென்ற ஹெல்மெட் கொள்ளையன்!
விழுப்புரம் அருகே உள்ள பாப்பனாப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன், புவனேஷ்வரி தம்பதியினர் இருசக்கர வாகனத்தில் பாப்பனாப்பட்டில் இருந்து விழுப்புரம் நோக்கிச் சென்றுள்ளனர். அப்போது, அய்யங்கோவில்பட்டு மேம்பாலம் அருகே இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து வந்த ஹெல்மெட் அணிந்த மர்ம நபர் ரூ.3 லட்சம் மதிப்புள்ள ஆறு சவரன் தங்கத் தாலியை பறித்துச் சென்றார்.
தங்க தாலியை பறித்ததால் வெங்கடேசன், புவனேஸ்வரி ஆகியோர் தேசிய நெடுஞ்சாலையில் கீழே விழுந்தனர். இதில் புவனேஸ்வரிக்கு இடது தோள்பட்டையில் எலும்பு முறிவு ஏற்பட்டு விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். தங்க தாலி திருடு போனது குறித்து வெங்கடேசன் தாலுக்கா காவல் நிலையத்தில் அளித்தார்.
இந்த புகாரின் பேரில் தாலுகா போலீஸார் வழக்குப் பதிந்து மர்மநபர்களை தேடி வருகின்றனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட வெங்கடேசன் கூறியதாவது, அய்யங்கோவில்பட்டு பகுதியில் சிசிடிவி கேமரா இல்லாததை அறிந்து, கொள்ளையில் ஈடுபடும் கொள்ளையர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!