குவைத்தில் மூச்சுத்திணறி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி... முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

குவைத் நாட்டில் புகை காரணமாக மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிவாரணத் தொகை வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “கடலூர் மாவட்டம், விருத்தாச்சலம் வட்டம், மங்கலம்பேட்டை கிராமத்தில் வசித்து வரும் முகமது யாசின் மற்றும் முகமது ஜுனைத் இருவரும் குவைத் நாட்டில் ஓட்டுநர்களாக பணியாற்றி வந்தனர். இந்நிலையில், ஜனவரி 19ம் தேதி காலையில் தங்கியிருந்த அறையில் கடும் குளிரில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள தீ மூட்டியுள்ளனர்.
இச்சம்பவத்தில் உயிரிழந்த இருவரின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன். அத்துடன் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் தலா ரூ 5 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்” என பதிவிட்டுள்ளார்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!