undefined

குலசை கோவில் உண்டியல் காணிக்கை ரூ.4.57 கோடி... கடந்த ஆண்டை விட ரூ.46 லட்சம் கூடுதல் வசூல்!

 

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோயிலில் தசரா திருவிழாவில் பக்தர்கள் ரூ.4.57 கோடி உண்டியல் காணிக்கை செலுத்தியுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோயிலில் தசரா திருவிழா, அக்.3 முதல் 14 வரை நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பல்வேறு வேடங்களை அணிந்து அம்மனுக்கு காணிக்கை வசூலித்தனர். நிறைவு நாளில் காணிக்கைப் பணத்தை உண்டியல்களில் செலுத்துவதற்கு வசதியாக, கோயில் வளாகத்தில் 18 நிரந்தர உண்டியல்களும், 65 தற்காலிக உண்டியல்களும் அமைக்கப்பட்டிருந்தன.

இந்த உண்டியல்களின் காணிக்கைகளை எண்ணும் பணி 5 நாள்கள் நடைபெற்றது. இதில் ரூ. 4.57 கோடி ரொக்கம்,115 கிராம் 300 மில்லி தங்கம், 2,689 கிராம் 900 மில்லி வெள்ளி,வெளிநாட்டு பணத்தாள்கள் 15 ஆகியவற்றை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். இது கடந்த ஆண்டை விட ரூ. 46 லட்சம் கூடுதலாகும். 

இப்பணிக்கு சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயண சுவாமி திருக்கோயில் துணை ஆணையர் கோமதி, குற்றாலம் திருக்குற்றாலநாத சுவாமி கோயில் உதவி ஆணையர் யக்ஞநாராயணன் ஆகியோர் தலைமை வகித்தனர். இப்பணியை கோயில் செயல் அலுவலர் ராமசுப்பிரமணியன், ஆய்வர் பகவதி, அறங்காவலர்கள் குழு தலைவர் வே.கண்ணன் மற்றும் அறங்காவலர்கள் ஆய்வு செய்தனர்.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!