undefined

குலசை தசரா முத்தாரம்மன் கோயில் திருவிழா... அக்.3ல் கொடியேற்றத்துடன் தொடக்கம்!

 

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா பெருந்திருவிழா வரும் அக்டோபர் மாதம் 3ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் அருள்மிகு ஞானமூர்த்தீஸ்வரர் உடனுறை அருள்தரும் முத்தாரம்மன் திருக்கோயிலில் தசரா திருவிழா ஆண்டுதோறும் 11 நாள்கள் தசரா திருவிழா மிக பிரமாண்டமாக நடைபெறும்.

நிகழாண்டு இத்திருவிழா, அக்.3 ஆம் தேதி காலையில் கொடிப்பட்ட வீதியுலாவைத் தொடர்ந்து 9.30 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தொடர்ந்து சிறப்பு அலங்கார பூஜைகள், அன்னதானம் நடைபெறுகிறது. இரவு 10 மணிக்கு அம்மன் சிம்ம வாகனத்தில் துர்க்கை திருக்கோலத்தில் பவனி வந்து அருள்பாலிப்பார்.

விழா நாள்களில் தினமும் காலை முதல் இரவு வரை அம்மன் மற்றும் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.  தினமும் இரவு 10 மணிக்கு அம்மன் பல்வேறு வாகனங்களில் பல்வேறு திருக்கோலங்களில் எழுந்தருளி திருவீதியுலா வந்து அருள்பாலிப்பார். கொடியேற்றத்தைத் தொடர்ந்து காப்பு அணியும் பக்தர்கள்,தசரா குழுவினர் பல்வேறு வேடங்களை அணிந்து வீதிகள் தோறும் கலைநிகழ்ச்சிகள் நடத்தி அம்மனுக்கு காணிக்கை வசூலிப்பார்கள்.

விழாவின் சிகர நிகழ்வான சூரசம்ஹாரம் அக்.12 ஆம் தேதி நடைபெறும். இதையொட்டி அன்று இரவு 11 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜையைத் தொடர்ந்து கடற்கரை சிதம்பரேஸ்வரர் கோயில் முன்பாக சிம்ம வாகனத்தில் எழுந்தருளும் அம்மன், பல்வேறு வேடங்களில் வலம் வரும் மகிசாசூரனை வதம் செய்வார். கடற்கரை மேடை, சிதம்பரேஸ்வரர் திருக்கோயில் அபிஷேக மேடை, கோயில் கலையரங்கில் எழுந்தருளும் அம்மனுக்கு பல்வேறு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.

அக்.13ம் தேதி காலையில் பூஞ்சப்பரத்தில் எழுந்தருளும் அம்மன் திருவீதியுலா புறப்பட்டு மாலையில் கோயிலை வந்தடைந்தவுடன் காப்பு களைதல் வைபவம் நடைபெறும்.

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!