காதலிக்கும் பெண்ணை முத்தமிடுவது பாலியல் குற்றம் ஆகாது.. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த வாலிபரும், இளம்பெண்ணும் காதலித்து சமீபத்தில் பிரிந்தனர். இந்நிலையில், காதலன் மீது பெண் வழக்கு தொடர்ந்துள்ளார். அதன்படி, இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 354ன் கீழ் இளைஞர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதை எதிர்த்து, தன் வழக்கை ரத்து செய்யக்கோரி இளைஞர் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது. ''இந்த வழக்கின் மனுதாரருக்கு 20 வயது ஆகிறது. இவர் 19 வயது இளம்பெண்ணை காதலித்து வருகிறார். இருவரும் சந்தித்தபோது, மனுதாரர் பெண்ணை கட்டி முத்தமிட்டதாகவும், பின்னர் திருமணம் செய்ய மறுத்ததாகவும் மனுதாரர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
மனுதாரர் மீதான குற்றச்சாட்டுகள் எடுக்கப்பட்டாலும், காதலில் இருக்கும் வாலிபர்களுக்கு கட்டிப்பிடிப்பதும், முத்தமிடுவதும் இயல்பானது, இந்திய தண்டனைச் சட்டம் 354-ன் கீழ் இதனை பாலியல் குற்றமாக ஏற்க முடியாது. வழக்கு மற்றும் வழக்கு தொடர்பான நடவடிக்கைகளை ரத்து செய்ய நீதிமன்றம் விரும்புகிறது. எனவே, மனுதாரர் மீதான வழக்குகளை ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!