சிறுமியை கடத்தி பலாத்காரம்.. இன்ஸ்டாகிராம் நண்பன் போக்சோவில் கைது!
மயிலாடுதுறை டவுன் ஸ்டேஷன் தெற்கு தெருவை சேர்ந்த அமிர்தலிங்கம் மகன் அபிநாத் (20). இவருக்கும் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுகாவை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. இந்நிலையில் சிறுமி தனது தந்தையுடன் மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு வந்து புகார் அளித்தார்.
அதில், அபிநாத் கடந்த 25ம் தேதி அவரை கடத்திச் சென்று பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கினார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இது குறித்து மயிலாடுதுறை அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர். பாதிக்கப்பட்ட சிறுமியும் மயிலாடுதுறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து அபிநாத் நேற்று போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கிளை சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் அபிநாத் பாலியல் தொல்லைக்கு உடந்தையாக இருந்த 5 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!