காரைக்குடியில் இளம்பெண் கடத்திச் சென்று பலாத்காரம்... 2 பேருக்கு ஆயுள் தண்டனை!
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் இளம்பெண்ணை, காவலர்கள் என்று கூறி கடத்திச் சென்று பலாத்காரம் செய்த வழக்கில் இருவருக்கு வாழ்நாள் முழுவதும் ஆயுள் தண்டனை விதித்து சிவகங்கை நீதிமன்றம் உத்தரவிட்டது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கீழையப்பட்டியைச் சேர்ந்த இருசக்கர வாகன மெக்கானிக் சாத்தையா ( 49). அவரது நண்பர் கொரட்டியைச் சேர்ந்த அர்ஜூனன் ( 40). இருவரும் கடந்த 2015 மார்ச் 16ம் தேதி 23 வயது பெண்ணிடம் தாங்களை காவலர்கள் என்று கூறி கடத்தி சென்று பலாத்காரம் செய்தனர்.
இது குறித்த புகாரின்பேரில் காரைக்குடி அனைத்து மகளிர் போலீஸார் வழக்கு பதிந்து சாத்தையா, அர்ஜூனன் ஆகிய இருவரையும் கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு சிவகங்கை மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
அரசு தரப்பில் வழக்கறிஞர் விஜயநிர்மலா ஆஜராகினார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கோகுல்முருகன் குற்றம் சாட்டப்பட்ட 2 பேருக்கும் வாழ்நாள் முழுவதும் ஆயுள் தண்டனையும், தலா ரூ.23,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தனர்.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!