undefined

”விபத்தினால் முகம் தான் போச்சு..” இணையத்தில் வைரலாகும் கேரள தம்பதி..!!

 
தீ விபத்தின் மூலம் முகம் சிதைந்த நிலையில் தன்னிம்பிக்கையுடன் தனக்கு பிடித்த பையனுடன் வாழ்ந்து காட்டி வருகிறார் கேரளத்தை சேர்ந்த இளம்பெண்.

கேரள மாநிலத்தை சேர்ந்தவர் அம்ருதா, அகில் தம்பதி.  இவர்கள் இருவருக்கும் அறிமுகமானது பேஸ்புக் மூலமாகதானாம். அந்தப் பெண் அம்ரிதா ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது கடைசி பரீட்சையின் போது ஒரு நாள் படித்து விட்டு இவருடைய வீட்டில் கட்டிலுக்கு கீழே இருந்த மண்ணெண்ணெய் விளக்கு பக்கத்தில் இவருடைய புத்தகத்தை வைக்க போக அப்போது எதிர்பாராத விதமாக அந்த மண்ணெண்ணெய் விளக்கு கீழே விழுந்து தீ பிடித்ததில் இவருடைய முகத்தில் காயம் ஏற்பட்டு இருக்கிறது. முகம் முழுக்க தீக்காயம் பட்டதால் இவருடைய முகம் அப்படியே சிதலமடைந்து இருக்கிறது. அதில் அவருடைய இரண்டு காதுகளும் போய்விட்டதாம். கண்ணும் மூடாதாம். ஆனாலும் இவர் அவருடைய அம்மாவும் அப்பாவும் கொடுத்த பாசத்தால் அடுத்து வாழ வேண்டும் என்று அந்த வலி வேதனையிலிருந்து வெளியே வந்திருக்கிறார். ஆனாலும் ஸ்கூலுக்கு போகும்போது ஹாஸ்பிடலுக்கு போகும்போது இதுவரை எல்லோரும் பரிதாபமாக பார்ப்பதும், ஐயோ என்று சிலர் சொல்லுவதும், சிலர் அருவருப்பமாக பார்ப்பதும் இவருக்கு வேதனையை கொடுத்திருக்கிறது. அதற்கு பிறகு தான் இவருடைய அம்மா இவருக்காக கார் ஓட்டி படித்து இவரை தினமும் காரில் ஸ்கூலுக்கு கொண்டு வந்து விட்டிருக்கிறார்(இப்போதும் அவருடைய அம்மா கேரளாவில் வாடகை கார் ஓட்டிக் கொண்டிருக்கிறாராம்).



ஆனாலும் ஸ்கூலில் இவரோட சீனியர், ஜூனியர் எல்லாரும் இவரை சுற்றி நின்று வேடிக்கை பார்க்கும் போது இவர் வேதனையின் உச்சத்தில் பல நாள் கதறி அழுதாறாம். ஆனாலும் வீட்டிற்கு வந்து அவருடைய தந்தை தாய் கொடுத்த நம்பிக்கையால் அடுத்தடுத்து படித்துக் கொண்டிருந்தார். அப்போதுதான் இவர் பேஸ்புக் யூஸ் பண்ணிக் கொண்டிருக்கும்போது அகிலுடைய பழக்கம் ஏற்பட்டிருக்கிறது.

இருவரும் முதலில் நட்பாக பழகி இருக்கின்றனர். பிறகு காதலிக்க தொடங்கி இருக்கின்றனர். இவர்கள் காதலிக்கும் போதே அம்ரிதா தன்னை பற்றி எல்லா விவரத்தையும் கூறிவிட்டாராம். பிறகு இருவரும் நேரடியாக சந்தித்து இருக்கிறார்கள். அப்போதும் அகில் தன்னுடைய காதலில் உறுதியாக இருக்க பிறகு வீட்டில் சொல்லி திருமணத்தை முடித்து இருக்கின்றனர்.



இப்போது இவர்கள் இன்ஸ்டாகிராம், யூடியூப் என எல்லாவற்றிலும் ரீல்ஸ் வீடியோக்கள் வெளியிட்டு வருகின்றனர். அதை பார்த்து பலர் அகில் அழகாக இருக்கிறார் இவர் எதுக்கு இந்த மாதிரி பொண்ணை கல்யாணம் செய்ய வேண்டும் என்று சிலர் கேள்வி கேட்டு கமெண்ட் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதிலும் ஒரு சிலர் இந்த பொண்ணுக்கு இருக்கும் குறையை வைத்து இவன் பிரபலத்தை தேடிக் கொண்டிருக்கிறான் என்று சிலர் கமெண்ட் போடுகிறார்களாம். ஆனாலும் யார் என்ன போட்டாலும் நாங்கள் அதைப் பற்றி கவலைப்படுவதே கிடையாது. எனக்கு அம்மா கிடையாது அம்மா மாதிரி எனக்கு அம்ரிதா இருக்கிறார். அதனால் நான் அவரை எப்போதும் காதலிப்பேன். எனக்கு வெளி அழகு தேவையே இல்லை. அமிர்தாவின் குணம் தான் எனக்கு ரொம்பவே பிடித்தது என்று அகில் பேசியிருக்கிறார். தற்போது இந்த வீடியோஸ் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் இவருக்கு பலர் வாழ்த்துக்களை குவித்து வருகிறார்கள்.