நவ.25ல் நிச்சயதார்த்தம்.. டிச.11ல் திருமணம்... கீர்த்தி மதம் மாறுவதை ஆண்டனி விரும்பவில்லை... நடிகை கீர்த்தியின் தந்தை சுரேஷ் குமார் பேட்டி!
கடந்த ஒரு வார காலமாகவே நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணம் குறித்த செய்தி இணையதளங்களில் வலம் வந்து வைரலான நிலையில், நடிகை கீர்த்தி சுரேஷ் - ஆண்டனி திருமண நிச்சயதார்த்தம் நவம்பர் 25ம் தேதி நடைபெற உள்ளதாகவும், திருமணம் வரும் டிசம்பர் 11ம் தேதி கோவாவில் நடைபெறும் என்றும் கீர்த்தியின் தந்தை சுரேஷ் குமார் கேரளாவில் செய்தியாளர்களிடையே தெரிவித்துள்ளார்.
நடிகை கீர்த்தி சுரேஷ் (32) தனது 15 ஆண்டுகால நண்பரான ஆண்டனி தட்டில் என்பவரை திருமணம் செய்ய உள்ளார். இவர்களது திருமணம் கோவாவில் வரும் டிசம்பர் 11ம் தேதி நிகழ இருக்கிறது. கொச்சியை சேர்ந்த ஆண்டனி தோஹாவில் தொழிலதிபராக இருக்கிறார்.
கீர்த்தியின் தந்தையும், தயாரிப்பாளருமான ஜி சுரேஷ் குமார் மற்றும் தாயாரும், நடிகையான மேனகா இவர்களது காதலுக்கு சம்மதம் தெரிவித்துள்ளனர். இருவரும் 12ம் வகுப்பில் இருந்தே நண்பர்கள் என்று நடிகை கீர்த்தி சுரேஷின் தந்தை கூறினார்.
திருமணத்திற்கு இரண்டு மத நம்பிக்கைகள் தடையாக இருக்குமோ என்ற கவலை எங்களுக்கு இருந்தது. அதன் பின்னர் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு எல்லாம் நம்பிக்கையாக மாறியது. கோவில்களுக்கு செல்லும் ஆண்டனி, கீர்த்தி மதம் மாறுவதை விரும்பவில்லை. திருமணம் மதச் சடங்குகளுக்கு முக்கியத்தும் கொடுத்து நடைபெறாது. அப்படி மதச் சடங்குகள் செய்வதாக இருந்தால் திருமணத்தின் போது இரண்டு மதங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்றார்.
முன்னதாக ஆண்டனியும் கீர்த்தியும் தாய்லாந்தில் திருமணம் செய்துக் கொள்ள திட்டமிட்டிருந்தனர். அதன் பின்னர் இருவரது பெற்றோர்களின் கருத்துக்கும் மதிப்பளித்து கோவா திருமண இடமாகத் தேர்வு செய்யப்பட்டது. நடிகை கீர்த்தி சுரேஷின் தந்தை சுரேஷ் குமார் பாஜக மாநிலக் குழு உறுப்பினராகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
மலையாளத்தில் கீதாஞ்சலி படம் மூலமாக அறிமுகமான கீர்த்தி, அடுத்தடுத்து தமிழிலும், தெலுங்கிலும் ரசிகர்களிடையே புகழடைந்து நட்சத்திரமாக வெற்றி பெற்றார். துல்கர் சல்மானுடன் கீர்த்தி சுரேஷ் நடித்த மகாநதி திரைப்படம் அவரது திரைவாழ்க்கையில் பெரிய திருப்புமுனையாக அமைந்தது.
நடிகை சாவித்ரியின் துயர வாழ்க்கையை சித்தரிக்கும் கதாபாத்திரம் அவருக்கு கச்சிதமாக பொருந்தி, சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் பெற்றுத் தந்தது. விஜய் நடித்த 'தெறி' படத்தின் ரீமேக்கான பேபி ஜான் படத்தில் வருண் தவானுடன் பாலிவுட்டில் அறிமுகமாகிறார் கீர்த்தி சுரேஷ்.
அவளுடைய மகிழ்ச்சியே நாம் விரும்புவது. ஆண்டனி எங்கள் கவலைகளை தீர்த்துவிட்டார். அனைவரின் சம்மதத்துடனும் ஆசிர்வாதத்துடனும் திருமணம் நடைபெற உள்ளது என்று அவரது தந்தை ஜி சுரேஷ் குமார் தெரிவித்துள்ளார்.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!