undefined

கார்த்திகை ஞாயிறு... மீன்கள் விலை குறைவு... மீனவர்கள் கவலை!

 

காா்த்திகை மாதம் தொடங்கிய நிலையல், தூத்துக்குடியில் மீன்வரத்தும் குறைந்து இருந்தது. அதே சமயம் மீன்களின் விலையும் குறைந்ததால் மீனவா்கள் கவலையடைந்தனர். தமிழகம் முழுவதுமே கார்த்திகை மாதம் தொடங்கியிருப்பதால் பலரும் சபரிமலை ஐப்பனுக்கும், முருகருக்கும் மாலை அணிந்து விரதம் இருந்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முதலே அசைவ உணவகங்களிலும் விற்பனை டல்லடிக்க தொடங்கியது.

தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடித் துறைமுகத்தில் மீனவா்கள் வழக்கம் போல கடலுக்குச் சென்று நேற்று காலை கரை திரும்பினா். புயல், மழை எச்சரிக்கை காரணமாக நாட்டுப் படகுகள் குறைந்த எண்ணிக்கையிலேயே கடலுக்குச் சென்றால், மீன்வரத்து குறைந்து காணப்பட்டது.

காா்த்திகை மாதம் தொடங்கியதையொட்டி ஏராளமான பக்தா்கள் சபரிமலை ஐயப்பனுக்கு மாலை அணிந்து விரதம் இருப்பதால், மீன்கள் வாங்குவதற்காக வியாபாரிகள் குறைந்த எண்ணிக்கையிலேயே வந்திருந்தனா். இதனால், மீன்கள் விலை குறைந்திருந்தது.

வழக்கமாக ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகும் சீலா மீன்கள் கிலோ ரூ. 800, விளைமின் ரூ. 350, ஊளி ரூ. 300, பாறை ரூ. 300, வாளை மீன் ரூ. 120, வங்கணை ஒரு கூடை ரூ. 1000, சாளை ஒரு கூடை ரூ. 700 என விற்பனையானது. மீன்வரத்து குறைந்து விலையும் குறைந்ததால், மீனவா்கள் கவலையடைந்தனா்.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!