undefined

மணிப்பூர் தலைமை நீதிபதியாக சென்னை நீதிபதி தேர்வு.. ஜனாதிபதி ஒப்புதல்!

 

மணிப்பூர் தலைமை நீதிபதி சித்தார்த் மிருதுல் நாளை ஓய்வு பெறுகிறார். இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்ற மூத்த நீதிபதி டி.கிருஷ்ணகுமாரை மணிப்பூர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்குமாறு உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதிகள் கொலீஜியம் குடியரசுத் தலைவருக்கு சமீபத்தில் பரிந்துரை செய்தது. இதை ஏற்று ஜனாதிபதி திரௌபதி முர்மு, மணிப்பூர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக டி.கிருஷ்ணகுமாரை நியமித்து உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் கூறியதாவது: கிருஷ்ணகுமாரின் நியமனத்துக்கு, தலைமை நீதிபதியுடன் ஆலோசனை நடத்திய ஜனாதிபதி, ஒப்புதல் அளித்தார். இதன் மூலம் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 66 ஆகவும், காலியிடங்கள் 9 ஆகவும் அதிகரித்துள்ளது. இனி  டி.கிருஷ்ணகுமார் மணிப்பூரின் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக செயல்படுவார் என்றார்.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!