20 வயதிற்குள்ளான இளம்பெண்கள்... ஹை பட்ஜெட்ல பாலியல் வர்த்தகம்.. சிக்கிய பெண்ணுக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை!
அத்தனை பேரும் 20 வயதிற்குள்ளான இளம்பெண்கள். இந்தியா, இலங்கை என்று ஆசிய நாடுகளைச் சேர்ந்த இளம்பெண்களை கடத்திச் சென்று விபச்சாரத்தில் ஈடுபடுத்தி வந்துள்ளார் அமெரிக்காவைச் சேர்ந்த ஹான் லீ என்ற 42 வயது பெண். இப்படி வேலைக்காக வெளிநாடுகளுக்கு செல்லும் ஆசிய பெண்களை குறி வைத்து, அவர்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தி பெரியளவில் செக்ஸ் வியாபாரம் செய்து வந்தது சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் உயர்மட்ட ராணுவ அதிகாரிகள், வழக்கறிஞர்கள் மற்றும் கார்ப்பரேட் தலைவர்களை வலையில் சிக்க வைத்து அவர்களிடமிருந்து பெரும் பணம் சம்பாதித்துள்ளார். பண ஆசை காட்டி ஆசிய பெண்களை அமெரிக்காவிற்கு அழைத்து வந்து பல்வேறு இடங்களில் வேலைக்கு அமர்த்தி இந்த தொழிலில் ஈடுபடுத்தியுள்ளார்.
ஹான் லீ கடந்த நவம்பர் மாதம் அமெரிக்க பெடரல் போலீசாரால் கைது செய்யப்பட்டார். முன்கூட்டிய விமானங்கள், தங்குமிடம் மற்றும் பிற அனைத்து வசதிகளையும் செய்து ஆசியாவில் இருந்து பெண்களை அவர் கவர்ந்தார். அவர்களின் கட்டணங்கள் $350 முதல் $600 வரை அதிகமாக இருந்தன, மேலும் அவர்களின் முக்கிய வாடிக்கையாளர்கள் அமெரிக்க உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் பெரிய நிறுவனங்களை சேர்ந்த ஊழியர்கள் தான்.
விசாரணை மையத்தில், ஹான் லீ தனது குற்றங்களை ஒப்புக்கொண்டார், ஆனால் அவர் எந்தப் பெண்களையும் தொழிலுக்கு கட்டாயப்படுத்தவில்லை என்று கூறினார். விசாரணையின் முடிவில், நீதிமன்றம் ஹான் லீக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
நவராத்திரி... வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு இதை கொடுத்தால் செல்வம் சேரும்!