undefined

 இன்னொரு பெண்ணுடன் தொடர்பா... விவாகரத்து குறித்து  ஜெயம் ரவி விளக்கம்!

 
 


ஆர்த்தியிடம் விவாகரத்து குறித்து ஏற்கெனவே பேசியிருக்கிறேன். 2 முறை நோட்டீஸ் அனுப்பி இருக்கிறேன். இன்னொரு பெண்ணுடன் என்னைத் தொடர்புபடுத்தி பேசுவது தவறான விஷயம் என்று நடிகர் ஜெயம் ரவி இன்று செய்தியாளர்களிடம் விளக்கம் கொடுத்திருக்கிறார்.

கடந்த சில நாட்களாகவே நடிகர் ஜெயம் ரவியின் விவாகரத்து செய்தி இணையத்தில் பேசுபொருளாகி இருக்கிறது. தனது மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாக அவர் அறிக்கை ஒன்றை வெளியிட பதிலுக்கு அவர் மனைவி, ‘தனிப்பட்ட முறையில் ஜெயம் ரவி எடுத்த முடிவு இது. அவரிடம் என்னை பேசவே யாரும் அனுமதிக்கவில்லை’ என பதில் அறிக்கை வெளியிட்டு பரபரப்பை கிளப்பினார். இந்நிலையில், பிரபல பாடகி ஒருவருடன் ஜெயம் ரவிக்கு ஏற்பட்ட நெருக்கம்தான் இவர்களது பிரிவுக்குக் காரணம் என செய்திகளும் கிளம்பியது.

ஜெயம் ரவி நடிப்பில் தீபாவளி ரிலீஸாக ‘பிரதர்’ படம் வருகிறது. இதன் இசை வெளியீட்டு விழா இன்று நடக்கிறது. இதற்கு முன்பாக பத்திரிக்கையாளர்களை சந்தித்த ஜெயம் ரவி தனது விவாகரத்து பற்றி விளக்கம் கொடுத்திருக்கிறார். “கடந்த சில மாதங்களாகவே விவாகரத்து முடிவில் இருந்தேன். இது வேதனையான விஷயம்தான். இரண்டு முறை இதுகுறித்து ஆர்த்திக்க்கு நோட்டீஸ் அனுப்பினேன். அவரது அப்பா என்னிடம் பேசினார். 

இரு குடும்பமும் பேசினார்கள். இப்படி இருக்கும்போது விவாகரத்து பற்றி தெரியாது என ஆர்த்தி சொல்வது அதிர்ச்சியாக உள்ளது. என் மகன்களிடம் அவர்களுக்குப் புரியும்படி என் முடிவு பற்றி சொன்னேன். எல்லா குழந்தைகளும் போல நாங்கள் சேர்ந்து இருக்க வேண்டும் என்றுதான் அவர்கள் விரும்புகிறார்கள். என் மகிழ்ச்சி முக்கியம் எனக் கருதியால் இந்த முடிவை என் பெற்றோர் ஏற்றுக் கொண்டார்கள்.

இத்தனை வருட சினிமா வாழ்வில் எந்த கிசுகிசுவும் இல்லாமல் இருந்தவன் நான். என்னை இன்னொரு பெண்ணுடன் சேர்த்து வைத்து பேசுவது தவறு. அவர் பலருக்கும் உதவி செய்து வருகிறார். நானும் அவரும் இணைந்து ஆன்மீக மையம் ஒன்று அமைக்க இருந்தோம். நிச்சயம் உண்மை ஒருநாள் வெளியே வரும்” என்றார்.

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!