undefined

நான் பதில் அளிக்க விரும்பவில்லை... ஜெயம் ரவி மனைவி ஆர்த்தி அதிரடி!

 

 தமிழ் திரையுலகில் ஜெயம் திரைப்படத்தின்  மூலம் அறிமுகமானவர் ரவி. இவர் சினிமா எடிட்டர் மோகனின் இளைய மகன்.  இவரது  சகோதரர் ராஜா திரைப்பட இயக்குநர். ரவி, சுஜாதா விஜயகுமார் என்ற சினிமா மற்றும் சீரியல் தயாரிப்பாளரின் மகள் ஆர்த்தியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கடந்த 2009ல் இவர்களது  திருமணம் நடைபெற்ற நிலையில்  இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் தனது மனைவியை பிரிவதாக ஜெயம் ரவி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

அத்துடன்  விவாகரத்துக்கோரி சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இது குறித்து அவரது மனைவி ஆர்த்தி இந்த விவாகரத்து விவகாரம் முழுக்க முழுக்க ஜெயம் ரவி தன்னிச்சையாக முடிவு .  குடும்ப நலன் கருதி எடுக்கப்பட்ட முடிவு அல்ல என பரபரப்பு அறிக்கை வெளியிட்டார். தன்னை ஆர்த்தி வீட்டை விட்டு வெளியேற்றியதாக ஜெயம் ரவி போலீசில் புகார் அளித்தார். 
 
இந்நிலையில் ஆர்த்தி  “எனது அமைதி பலவீனம் அல்ல; உண்மைக்கு மாறாக என்னை தவறாக சித்தரிப்பவர்களுகு நான் ஒருபோதும் பதிலளிக்க விரும்பவில்லை; என்னுடைய வார்த்தைகள் தவறாக வெளியிடப்பட்டுள்ளன. பரஸ்பர விவாகரத்துக்கு நான் சம்மதித்தாக வெளியான தகவல் அதிர்ச்சியை அளிக்கிறது. நான் தனிப்பட்ட முறையில் ஜெயம் ரவியை சந்திக்க அனுமதி கோரியும் இதுவரை அனுமதி் கிடைக்கவில்லை என்பதே உண்மை” எனக் கூறியுள்ளார். இந்த தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை