undefined

ஜெயக்குமார் வழக்கில் திடீர் திருப்பம்... நெல்லை தென்மண்டல ஐ.ஜி கண்ணன் பேட்டி!

 

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார் தனசிங் (வயது 60). சில தினங்களுக்குன் முன் மாயமான ஜெயக்குமாரை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் கடந்த 04.05.2024 அன்று கரைச்சுது புதூரில் வீட்டின் பின்புறமுள்ள தோட்டத்தில் பாதி எரிந்த நிலையில் ஜெயக்குமார் சடலமாக மீட்கப்பட்டார். ஜெயக்குமார் தனசிங்கின் உடல் கருகிய நிலையில் மீட்கப்பட்டது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் கொலையா, தற்கொலையா என பல்வேறு கட்டங்களிலும் பல்வேறு கோணங்களிலும் விசாரணை நடத்தப்பட்டு பல்வேறு தகவல்கள் செய்திகளாக வெளியாகி வருகின்றன. இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து நெல்லை தெற்கு மண்டல ஐஜி கண்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், நெல்லை காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் கொல்லப்பட்டாரா என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்றும், முதற்கட்ட பிரேத பரிசோதனை அறிக்கை மட்டுமே கிடைத்துள்ளதாகவும், முழுமையான அறிக்கை இன்னும் வரவில்லை என்றும்  ஐ.ஜி. கண்ணன் தெரிவித்துள்ளார். ஜெயக்குமாரின் வயிற்றில் கடப்பா கல்லும், வாயில் பாத்திரம் துலக்கும் கம்பியும் கட்டப்பட்டிருந்ததாக ஐ.ஜி. கண்ணன் கூறினார்.

தடயவியல் நிபுணர்களைக் கொண்டு அறிவியல் பூர்வமாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், 10 டி.எஸ்.பி.க்கள் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதால், ஒரு வாரத்தில் தெளிவான முடிவு கிடைக்கும் என்றும் தென்மண்டல ஐ.ஜி. கண்ணன் கூறினார். ஜெயக்குமாரின் கடிதத்தில் உள்ள கையெழுத்து குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தேவைப்பட்டால் சபாநாயகரிடமும் விசாரணை நடத்தப்படும் என்றும் ஐஜி கண்ணன் கூறியுள்ளார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!