புர்ஜ் கலீபாவில் ஜவான் ட்ரெய்லர்?! ரசிகர்கள் எதிர்பார்ப்பு!!
உலகின் மிக உயரமான கட்டிடம் புர்ஜ் கலிஃபா. இந்த கட்டிடத்தில் ஷாருக்கான் நடித்த ஜவான் படத்தின் டிரைலர் வெளியிடப்பட உள்ளது. தமிழில் விஜய் நடித்த தெறி, மெர்சல் மற்றும் பிகில் என வரிசையாக 3 வெற்றிப்படங்களை கொடுத்த அட்லீ, தற்போது ஷாருக்கான் நடிக்கும் ஜவான் படத்தின் மூலம் ஹிந்தி திரையுலகில் இயக்குனராக காலடி எடுத்து வைத்துள்ளார். ஜவான் படத்தை ஷாருக்கான் மனைவி கெளரி கான் உடன் இணைந்து தயாரித்துள்ளார்.
அதே நேரத்தில் ஜவான் படத்தின் மூலம் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா பாலிவுட்டில் ஹீரோயினாக அடியெடுத்து வைத்துள்ளார். இப்படத்தில் ஷாருக்கானுக்கு வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி , யோகிபாபு, பிரியாமணி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்கள் களம் இறக்கப்பட்டுள்ளன. இந்த படத்திற்கான இசை அனிருத் . அவரது இசையில் இதுவரை வெளிவந்த 2 பாடல்களுமே மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன.
ஜவான் திரைப்படம் உலகம் முழுவதும் செப்டம்பர் 7ம் தேதி பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆக உள்ளது. ஜவான் படத்தின் ரிலீஸ் நெருங்கி வருவதால் அப்படத்தின் அப்டேட்டுகள் வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில் அப்படத்தின் டிரைலர் குறித்த மாஸான தகவல் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.ஜவான் படத்தின் டிரைலர் நாளைமறுநாள் ஆகஸ்ட் 31ம் தேதி இரவு 9 மணிக்கு உலகின் மிக உயரமான கட்டிடமான துபாயில் உள்ள புர்ஜ் கலிஃபாவில் வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அப்படத்தின் டிரைலர் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!