undefined

ஜப்பான் இளவரசி யூரிகோ காலமானார்... உலக தலைவர்கள் இரங்கல்!

 

ஜப்பான் நாட்டின் இளவரசி யூரிகோ காலமானதாக அதிகாரப்பூர்வமாக தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது. யூரிகோ, ஜப்பான் அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினராவார். இவருக்கு வயது 101.  பேரரசர் ஹிரோஹிட்டோவின் இளைய சகோதரரான இளவரசர் மிகாசாவின் மனைவியும், தற்போதைய பேரரசர் நருஹிட்டோவின் அத்தையுமான இளவரசி யூரிகோ காலமாகி விட்டதாக ஜப்பானிய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.அவரது மரணத்திற்கான காரணம் குறித்து இதுவரை  எந்த தகவலும் வெளியாகவில்லை.  

இளவரசி யூரிகோவின் காலமான செய்தி அறிந்ததும்  ஜப்பான் பிரதமர் ஷிகெரு இரங்கல் தெரிவித்தார். மேலும், அவர் ``மார்ச் மாதத்தில் யூரிகோ நிமோனியாவால் பாதிப்படைவதற்கு முன்புவரையில், அவர் நன்றாகவே இருந்தார். அவர் தனது நூற்றாண்டு காலத்திலும் சிறப்பாகவே வாழ்ந்து வந்தார்'' என பதிவிட்டுள்ளார்.