undefined

ஜெய்ஷா ஐசிசி  இளம் வயது தலைவராக போட்டியின்றி தேர்வு !  

 

 சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் ஐசிசியின்  தலைவராக இருப்பவர்  கிரெக் பார்க்லே. இவரது பதவிக்காலம் நவம்பர் 30ம் தேதியுடன் முடிவுக்கு வருவதை அடுத்து புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டன.  இரண்டு ஆண்டுகள் பதவிக்காலம் கொண்ட ஐசிசி தலைவர் பதவியில் ஒருவர் 3 முறை பதவி வகிக்கலாம். கிரெக் பார்க்லே, தொடர்ந்து 2 முறை ஐசிசி தலைவராக இருந்து வருகிறார். இந்நிலையில் அவர் தாம் 3வது முறை போட்டியிடப் போவதில்லை எனத் தெரிவித்துள்ளார்.  இந்தப் பதவிக்கு இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலாளரும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மகனுமான ஜெய் ஷா, போட்டியிடவுள்ளதாக தகவல் வெளியாகியது. இந்நிலையில் ஐசிசியின் புதிய தலைவராக எந்தவிதமான போட்டியுமின்றி ஜெய் ஷா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


குஜராத் கிரிக்கெட் அசோசியேசனில் ஜெய் ஷா தனது பயணத்தை தொடங்கினார். தற்போது பிசிசிஐ செயலாளர் என்பதை கடந்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக உயர்ந்துள்ளார்.  சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் புதிய தலைவராக ஜெய்ஷா போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக் ஐசிசி அவர்களுடைய அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.


ஐசிசி வெளியிட்டிருக்கும் அந்த அறிக்கையில், “பிசிசிஐயின் தற்போதைய கவுரவச் செயலாளரான ஜெய்ஷா, ஐசிசியின் சுதந்திரத் தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.  டிசம்பர் 1, 2024 அன்று ஐசிசியின் புதிய தலைவராக பொறுப்பேற்பார். ஆகஸ்ட் 20 அன்று, தற்போதைய ஐசிசி தலைவராக இருக்கும் கிரெக் பார்க்லே நவம்பரில் அவரது பதவிக்காலம் முடிவடையும் போது பதவி விலகுவார்" என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இளம் வயதில் அதாவது 36 வது வயதில் ஐசிசி தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை