மாஸ்... ‘கூலி’ ஷூட்டிங் முடிஞ்சதும் ‘ஜெயிலர்2’வில் ரஜினி... வேகமெடுக்கும் ப்ரீ புரொடக்ஷன் பணிகள்!
‘கூலி’ படத்தின் படப்பிடிப்புகள் முடிந்ததும், ‘ஜெயிலர்2’ படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார் ரஜினி. ஜெயிலர் 2 படத்திற்கான ப்ரீ புரொடக்ஷன் பணிகள் வேகமெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நடிகர் ரஜினி நடிப்பில் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில்‘ஜெயிலர்’ படம் கடந்த ஆண்டு வெளியானது. படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தாலும் பாக்ஸ் ஆஃபிஸில் நல்ல வசூலைப் பெற்றது.
ஜெயிலர் படம் வசூல் ரீதியில் பெரும் வெற்றி பெற்றிருந்த நிலையில், ‘ஜெயிலர்2’ படம் உருவாவது குறித்து அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. இயக்குநர் நெல்சனும் அதை அப்போதைய பேட்டிகளில் உறுதிப்படுத்தி இருந்தார். இந்நிலையில், ‘ஜெயிலர்2’ படத்திற்கான ப்ரீ புரொடக்ஷன் பணிகளும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சமீபத்தில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நெல்சனிடம் ‘ஜெயிலர்2’ படத்திற்கான அப்டேட் கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்து பேசிய அவர், இன்னும் ஒரு மாதத்தில்‘ஜெயிலர்2’ அப்டேட் வந்துவிடும் என்றும் தயாரிப்பு நிறுவனம் அதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என்றும் கூறியுள்ளார். ‘ஜெயிலர்’ படத்தின் முதல் பாகத்தைப் போலவே, இரண்டாம் பாகமும் பான் இந்தியா படமாக தயாராக உள்ளது. தற்போது ‘கூலி’ படத்தில் நடித்து வரும் ரஜினி, ‘கூலி’ படத்தின் படப்பிடிப்பு முழுவதையும் முடித்துவிட்டு அடுத்து ‘ஜெயிலர்2’ படப்பிடிப்பில் இணைகிறார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!