ரூ10 நாணயத்தை வாங்க மறுத்தால் சிறை... சில்லறை கடைகளுக்கு பறந்த உத்தரவு...!!

 

 தென் மாவட்டங்களில் ரூ10 நாணயங்கள் செல்லாது. இவைகள் பெரும்பாலும் பேருந்துகள் ,  கடைகளில் வாங்கப்படுவதில்லை. இதனால் மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். இவை பெரும்புகாராக எழுந்துள்ளன. இது குறித்து  ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர்   விஷ்ணு சந்திரன் வெளியிட்டுள்ள  செய்திக்குறிப்பில்  “இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட  ரூ10   நாணயங்கள் செல்லாது என மக்கள் மத்தியில் பரவலாக ஒரு எண்ணம் உள்ளது. அதுகுறித்து  ரிசர்வ் வங்கி பல்வேறு அறிக்கைகளை அளித்தபோதும் ரூ10  நாணயம் செல்லாது என்ற பொய்யான தகவல் பரவி வருகிறது.

இதனால்  பல கிராம பகுதிகளில் உள்ள கடைகளில் ரூ10  நாணயம் மறுக்கப்பட்டுவருகிறது. இவ்வாறு அரசு அங்கீகரித்த நாணயத்தை மறுப்பது சட்டப்படி குற்றமாகும். 
இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட ரூ10  நாணயத்தை இந்திய ரிசர்வ் வங்கி முதன்முதலில் 2005 ல்  வெளியிட்டது. அதனை தொடர்ந்து ரூ10  நாணையம் புழக்கத்தில் வரத் தொடங்கியது. இதுவரை 14 வகையான ரூ10   நாணயங்கள் வெளியிடப்பட்டுள்ளன.  

ஒன்றிலிருந்து மற்றொன்று   டிசைன் வாரியாக மாறுபட்டுள்ளது. அதிலும் முக்கியமாக ஒரு வகை ரூ10  நாணயத்தில் ரூபாய் சின்னம் இருக்கும். மற்றொன்றில் ரூபாய் சின்னம் இருக்காது. எனவே   அதனை போலியான நாணயம் என நம்பத் தொடங்கி அது காலம் செல்ல செல்ல பத்து ரூபாய் நாணயத்தை வங்கிகள் நிறுத்த போகின்றன  என வதந்தி பரவி வருகின்றன.  ரூ.10 நாணயத்தை வாங்க மறுத்தால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும்” என எச்சரிக்கை விடுத்துள்ளார்.  

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!