undefined

நான் குடிச்சு நாளாச்சி.. 100வது நாள் வெற்றிப்பயணம்.. பெருமையோடு பேனர் வைத்த இளைஞர்!

 

சென்னை அடுத்த பூந்தமல்லியை சேர்ந்தவர் சிவக்குமார். இவர் பூந்தமல்லி அரசு மேல்நிலைப்பள்ளி அருகே தள்ளுவண்டியில் கற்றாழை சாறு விற்பனை செய்து வரும் 42 வயது நபர். நாளடைவில் மது பழக்கம் தீவிரமடைந்து இவரும், இவரது நண்பரும் குடிப்பழக்கத்திற்கு அடிமையானதாக கூறப்படுகிறது.  ஒரு கட்டத்தில், யாரும் சொல்லாமல் இதை உணர்ந்து, இருவரும் குடிப்பதை விட்டுவிடுவது பற்றி விவாதிக்கிறார்கள்.

அதற்கு முன் இருவரும் தொடர்ந்து 100 நாட்கள் மது அருந்த மாட்டோம் என சபதம் எடுத்துள்ளனர். இதை கண்டிப்பாக கடைபிடித்த சிவக்குமார், மது அருந்தாமல் 100 நாட்களை கடந்தார். ஆனால் சபதத்தில் அவருடன் சென்ற அவரது நண்பர், பாதியிலேயே போதைக்கு அடிமையாகிவிட்டார்.இந்நிலையில், 100 நாட்களாகியும் மது என்ற அரக்கனை குடிக்காமல் இருந்தது சிவகுமாருக்கே ஆச்சர்யம் ஏற்பட்டது.

'வெற்றிகரமாக 100 நாட்கள் மது அருந்தவில்லை' என தனது புகைப்படத்துடன் கூடிய பேனரை கடைக்கு அருகில் பேனர் வைத்துள்ளார். நண்பனின் வார்த்தைகள் மாறினாலும், அந்த பேனரில் 'நிறம் மாறாத மலர் நட்பு' என்ற செய்தியையும் பதிவிட்டுள்ளார் சிவக்குமார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சிவக்குமார், எனக்கும் எனது நண்பருக்கும் மது அருந்தக்கூடாது என்பதில் போட்டி ஏற்பட்டது.அதில் 100 நாட்கள் மது அருந்தவில்லை.அதை கொண்டாடும் விதமாக நானே வாழ்த்தி பேனர் வைத்தேன். மது குடிக்காமல் சேர்த்து வைத்த எனது பணத்தை 80 ஆயிரம் ரூபாய் கடன் செலுத்தினேன். தினமும் மது அருந்தாமல்  ,

தற்போது உடலளவிலும் நலமாக உள்ளேன்.எனது மனமாற்றத்தை பொதுமக்கள் வரவேற்று வாழ்த்து தெரிவித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்,'' என்றார். ஒவ்வொரு மனிதனுக்கும் சுயமரியாதையும் தன்னம்பிக்கையும் தேவை என்பதை இந்த தெருவோர வியாபாரி நிரூபித்துள்ளார் என்பதே நிதர்சனமான உண்மை.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்