மனைவியை பேய், பிசாசுன்னு கூறுவது சகஜம் தான்.. அதிரடி தீர்ப்பளித்த உயர்நீதிமன்றம்!

 

ஜார்கண்ட் மாநிலம் பொகாரோவைச் சேர்ந்த சஹ்தியோ குப்தாவின் மகன் நரேஷ் குமார் குப்தா. நரேஷ் குப்தாவும் ஜோதியும் 1993 இல் திருமணம் செய்து கொண்டனர். ஒரு வருடத்தில் அவர்களது திருமணத்தில் விரிசல் ஏற்பட்டது. ஜோதியின் தந்தை கன்ஹையா லால், நரேஷ் குடும்பத்தினர் மீது வரதட்சணை கொடுமை புகார் அளித்தார்.

தனது மகளுக்கு கார் வாங்கித் தருமாறு கூறி துன்புறுத்துவதாக மனுவில் தெரிவித்துள்ளார். மேலும், நரேஷ் தனது மனைவியை பேய், பிசாசு என்று கூறி கொடுமைப்படுத்துவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். அவரது மனுவில் நரேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் ஜோதியை மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்தி வந்துள்ளனர்.

வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் நீதிமன்றம் மற்றும் செஷன்ஸ் நீதிமன்றம் நரேஷ் குடும்பத்தினர் குடும்ப வன்முறையில் ஈடுபட்டதை உறுதி செய்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து நரேஷ் என்பவர் பாட்னா உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். மேல்முறையீட்டு மனுவை விசாரித்த பாட்னா உயர்நீதிமன்ற நீதிபதி பிபக் சவுத்ரி, நரேஷ் தனது மனைவியை துஷ்பிரயோகம் செய்ததற்கான ஆதாரம் இல்லை என்று கூறினார்.

ஜோதி துஷ்பிரயோகம் செய்யப்பட்டதை நிரூபிக்க மருத்துவ ஆதாரம் இல்லை என்றும் நீதிபதி கூறினார். மேலும், தனது மனைவியை பேய் என்று கூறியதாக அவர் கூறியதை நீதிபதி பரிசீலிக்க மறுத்துவிட்டார். அதற்கு விளக்கமளித்த நீதிபதி, தோல்வியடைந்த திருமணத்தில் கணவன்-மனைவி ஒருவரையொருவர் திட்டுவது சகஜம், அது கொடுமையல்ல. மேலும் கீழ் நீதிமன்றங்கள் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்து பாட்னா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்