undefined

மொத்தமாக மாற போகுது... அடுத்த 3 மணி நேரத்தில் 13 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை!

 

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், மொத்தமாக அடுத்த 3 மணி நேரத்தில் மாறப் போகுது. தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
கடந்த மே 4ம் தேதி முதல் கத்தரி வெயில் துவங்கிய நிலையில், தமிழகத்தில் வெப்ப நிலை மேலும் அதிகரிக்க துவங்கியது. பகல் நேரங்களில் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரவே முடியாத அளவுக்கு வெயில் வாட்டி வதைத்தது. இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு வேலூர், ஊத்தங்கரை பகுதிகளில் ஆலங்கட்டி மழையும், தர்மபுரி, கோவை உள்ளிட்ட இடங்களில் கனமழையும் பெய்ததால் வெப்பம் தணிந்தது.


இந்நிலையில் நாளை மே 12 குமரி கடலையொட்டி வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாக வாய்ப்பிருப்பதாக எதிர்பார்க்கப்படும் நிலையில், தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த மாத இறுதியில் புதிய காற்றழுத்தம் ஒன்று உருவாக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. ஜூன் மாதம் தென் மேற்கு பருவமழை தொடங்கவும் வாய்ப்பிருப்பதால் வெப்பம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
இந்நிலையில் தமிழகத்தில் செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி ஆகிய 13 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!