இன வெறியுடன் நடந்த போட்டி.. நைஜீரிய அழகிக்கு பெருகும் ஆதரவு!
மெக்சிகோவில் நடந்த மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை டென்மார்க் சேர்ந்த பெண் ஒருவர் வென்றுள்ளார். ஆனால் இந்த அழகிப் போட்டி இன வெறியுடன் நடத்தப்பட்டதாக சமூக வலைதளங்களில் ஆயிரக்கணக்கானோர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 73வது பிரபஞ்ச அழகி போட்டி மெக்சிகோ தலைநகர் மெக்சிகோ நகரில் நடைபெற்றது. மொத்தம் 125 நாடுகளைச் சேர்ந்த அழகிகள் கலந்து கொண்டனர்.
மாலை கவுன் அல்லது சாதாரண உடைகள், நீச்சல் உடைகள், தேசிய ஆடை அலங்காரம், நடனம் பாடல் மற்றும் பிற திறமைகளை கண்டறியும் போட்டி மற்றும் கேள்வி பதில் பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. பரபரப்பான இறுதிச் சுற்றில், டென்மார்க்கைச் சேர்ந்த 21 வயதான விக்டோரியா கியர், 2024 ஆம் ஆண்டுக்கான பிரபஞ்ச அழகி பட்டம் வென்றார். டென்மார்க்கில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பிரபஞ்ச அழகி இவர்தான்.
இரண்டாவது இடத்தை நைஜீரியாவைச் சேர்ந்த சிடிம்மா அடெட்சினாவும், மூன்றாவது இடத்தை மெக்சிகோவைச் சேர்ந்த மரியா பெர்னாண்டாவும் பெற்றனர். இந்நிலையில் சிடிம்மா அடெட்சினாவை ஏன் பிரபஞ்ச அழகியாக தேர்வு செய்யவில்லை என பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர். இந்த போட்டி நியாயமற்றது மற்றும் இனவெறி என்று பலர் குற்றம் சாட்டியுள்ளனர். நீங்கள் வெற்றி நட்சத்திரம் என நைஜீரிய அழகி சிடிம்மா அடெட்சினாவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!