undefined

பட்டியலின சிறுவன் மீது தாக்குதல்.. சிறுநீரை குடிக்க வைத்தும், புருவத்தை நீக்கியும் கொடூரம்..!!

 

 உத்தரபிரதேசம் மாநிலம் ஜான்பூரில் சுஜான்கஞ்ச் அருகே தலித் சிறுவனை தாக்கி சிறுநீர் குடிக்க வைத்தும், புருவத்தை கத்தியால் நீக்கியும் கொடுமை படுத்தியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  இரண்டு நாட்களுக்குப் பிறகு இந்த சம்பவம் தெரியவரவே, கொடூர தாக்குதல் நடத்திய இருவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், சிறுவனை மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதனிடையே, தங்கள் குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணிடம் சிறுவன் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டிய அவர்கள் இந்த செயலில் ஈடுபட்டதாக, தாக்குதல் நடத்தியவர்கள் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து, ‘அது உண்மையெனில் அவர்கள் காவல்துறையைதானே அனுகியிருக்க வேண்டும். எதிர்வினையாற்ற, அதுவும் இப்படி மனிதத்தன்மையே இல்லாமல் செயல்பட இவர்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது’ என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிகழ்வு சாதிய வன்கொடுமையால் நடந்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.

பட்டியல் சிறுவன் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பேசும் பொருளாகி உள்ளது.