undefined

தமிழகத்தில் பரபரப்பு... முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு... ஜி ஸ்கொயர் உள்ளிட்ட நிறுவனங்களிலும் ரெய்டு!

 

ஒரே நேரத்தில் தமிழகம் முழுவதும் ஜி ஸ்கொயர் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் இன்று அதிகாலை முதல் வருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர். அதே போன்று அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.  
புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூரில் உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியிருந்த நிலையில், இன்று காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இன்று அதிகாலை 8க்கும் மேற்பட்ட அதிகாரிகள் திடீரென குவிந்த நிலையில், அதிகாலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.
கடந்த 2021ல் அதிமுக ஆட்சியில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனையில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டு வருமான வரித்துறை அதிகாரிகள் விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை நடத்தி இருந்த நிலையில், அமலாக்கத்துறை இன்று சோதனை நடத்தி வருகின்றனர். 
அதே போன்று சென்னை ஆழ்வார்பேட்டை செயின்ட்மேரிஸ் சாலையில் உள்ள ஜி ஸ்கொயர் அலுவலகத்திலும் வருமான வரித்துறையினர் இன்று காலை முதல் சோதனையை நடத்தி வருகின்றனர்.
சென்னையில் மயிலாப்பூர், ஆழ்வார்பேட்டை, கிழக்கு கடற்கரை சாலை, அடையாறு, அமைந்தகரை, அண்ணா நகர், உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட இடங்களிலும், தரமணியில் உள்ள ஐ.டி நிறுவனம் உட்பட 10க்கும் மேற்பட்ட இடங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை நந்தனத்தில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழக அலுவலகத்திலும் வருமானவரித்துறை சோதனை நடைப்பெற்று வருகிறது. 
வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், தேர்தல் நேரத்தில் பணபுழக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக இந்த சோதனை நடைப்பெற்று வருவதாக கூறப்படுகிறது.