சார்பதிவாளர் அலுவலகத்தில் ஐ.டி ரெய்டு.. சிக்கிய ரூ.1.19 லட்சம்.. விழி பிதுங்கிய அதிகாரிகள்!

 

அரக்கோணத்தில் செயல்பட்டு வரும் சார்பதிவாளர் அலுவலகத்தில் சார்பதிவாளராக வின்சென்ட் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இங்கு நாள்தோறும் நிலம் மற்றும் வீட்டுமனைகள் தொடர்பாக நூற்றுக்கும் மேற்பட்ட பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், பத்திரப்பதிவு செய்வதற்கு ஒரு சில அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதாக பல்வேறு புகார்கள் எழுந்தன.

இதனையடுத்து, ராணிப்பேட்டை மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி கணேசன் தலைமையிலான ஆய்வாளர் விஜயலட்சுமி உட்பட 7 பேர் கொண்ட குழுவினர், நேற்று (ஜூன் 10) மாலை அதிரடியாக சார்பதிவாளர் அலுவலகத்திற்குள் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நுழைவு வாயில், வெளிப்புறக்கதவு மற்றும் அலுவலக கதவுகளை மூடி பூட்டியுள்ளனர். இதனால் சார்பதிவாளர் அலுவலகத்தில் இருந்த அதிகாரிகள், ஊழியர்கள், பத்திரப்பதிவு முகவர்கள் மற்றும் பத்திரப்பதிவு செய்ய வந்த நபர்கள் உட்பட பலர் வெளியே வரமுடியாமல் சிக்கிக் கொண்டனர்.

தொடர்ந்து, லஞ்ச ஒழிப்புத்துறையினர் அலுவலகத்தின் பல்வேறு இடங்கள் மற்றும் வாகனங்களில் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது, அலுவலகத்தின் பல்வேறு இடங்களில் கணக்கில் வராத 1 லட்சத்து 19 ஆயிரத்து 830 ரூபாய் பணத்தை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, பத்திரப்பதிவு அதிகாரிகள் மற்றும் உள்ளிருந்த நபர்களிடம் லஞ்ச ஒழிப்புத்துறையினர் விசாரணை நடத்தினர்.

மேலும், 5 மணி நேரத்துக்கு மேலாக பொதுமக்களை வெளியே அனுப்பாததால் பொதுமக்கள் ஆத்திரம் அடைந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து, லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைக்குப் பிறகு அனைவரும் வெளியில் அனுப்பப்பட்டனர். இச்சம்பவம் அரக்கோணம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!