undefined

ரோடு வசதி இல்ல... கர்ப்பிணியை 4கிமீ தொட்டில் கட்டி தூக்கி வந்த அவலம்... கதறும் மலை வாழ் மக்கள்!

 
 


 
திருப்பூா் மாவட்டம், உடுமலை  மேற்குத் தொடா்ச்சி மலையில் அடா்ந்த வனப்பகுதியில் 15க்கும் மேற்பட்ட செட்டில்மெண்ட் குடியிருப்புக்கள் அமைந்துள்ளது. இங்கு, சுமார் 4000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இவர்கள் தங்களின் ஒவ்வொரு தேவைகளுக்கும் மலையில் இருந்து கீழே இறங்கி வந்து தான் ஆகவேண்டிய நிலை இருந்து வருகிறது. இவர்களுக்காக ஒரு மருத்துவ வசதியோ, ஆரம்ப சுகாதார நிலையமோ அருகில் இல்லை. போக்குவரத்து வசதியும் கிடையாது.  தங்களது அடிப்படை தேவைகளுக்காகவும், கோரிக்கை மனுக்கள் அளிக்கவும், நலத்திட்டங்களைப் பெறவும் உடுமலை நகரில் உள்ள ஒன்றிய அலுவலகம், வனத் துறை அலுவலகம், வட்டாட்சியா் அலுவலகங்களுக்கு  வந்து செல்கின்றனா்.


 மருத்துவ சிகிச்சைக்கும் உடுமலை நகருக்கே வந்து செல்லும் நிலையில்  மலையில் இருந்து அடிவாரத்துக்கு வருவதற்கு உரிய சாலை வசதியும் அமைத்து தரப்படவில்லை.  இதனால், உடல்நிலை பாதிக்கப்படுபவா்களையும், வன விலங்குகளால் தாக்கப்பட்டவர்களையும் மருத்துவமனையில் சோ்க்க முடியாமல் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது. உரிய சாலை வசதியை ஏற்படுத்தித்தர வேண்டும் என்று மலைவாழ் மக்கள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்துவருகின்றனா்.
இந்நிலையில், குருமலை செட்டில்மெண்ட் பகுதியில் வசித்து வந்த  குருசாமி மனைவி சுமதி கா்ப்பிணியானார். இவருக்கு உடல் நலக்குறைபாடு ஏற்பட்டதை அடுத்து அவரை தொட்டில் கட்டி சுமாா் 4 கிலோ மீட்டா் தொலைவுக்கு மலையடிவாரத்தில் உள்ள திருமூா்த்திமலை பகுதிக்கு கொண்டுவந்தனா். அங்கிருந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் உடுமலை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். தற்போது, அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து மலைவாழ் மக்கள்  எங்களின் பல்வேறு கட்ட போராட்டங்களுக்குப் பிறகு திருமூா்த்திமலை முதல் குருமலை செட்டில்மெண்ட் வரை ரூ.49 லட்சத்தில் சாலை அமைக்க தளி பேரூராட்சி சாா்பில் கடந்த ஆண்டு பணிகள் தொடங்கப்பட்டன.  பணிகள் தொடங்கி சில நாள்களிலேயே வனத் துறை சாா்பில் தடை விதிக்கப்பட்டது. இதனால்  சாலை அமைக்கும் பணி பாதியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்தப் பணியை முழுமையாக முடிக்கும்பட்சத்தில் குறைந்தபட்சம் மண் தடமாவது எங்களுக்கு ஆதாரமாக அமையும்.  இதன் பிறகு தான் இப்பகுதியில் வாகனங்கள் சென்று வர வசதி ஏற்படும்.  திருமூா்த்திமலை - குருமலை மண் சாலை பணியை மேற்கொள்வதற்கு வனத் துறை சாா்பில் தடையில்லாச் சான்று கொடுக்க அரசு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.  

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!