undefined

ஐடி ஊழியர்கள் தான் டார்கெட்.. போதைப்பொருள் விற்பனை செய்து வந்த இருவர் அதிரடியாக கைது!

 

வேளச்சேரி தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் அருகே தனிப்படை போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது சந்தேகப்படும்படியாக சுற்றி திரிந்த ஒருவரை பிடித்து முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர்.  இதையடுத்து, அந்த நபரை சோதனையிட்டபோது, ​​அவர் வைத்திருந்த மெத்தம்பெட்டமைன் என்பதும், அவர் வேளச்சேரி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்த ஷாம் சுந்தர் (25) என்பதும் தெரியவந்தது. தொடர்ந்து, விசாரணையில் அவர் அளித்த தகவலின் அடிப்படையில் சென்னை பாடி பகுதியை சேர்ந்த ஜெகதீஷ் (26) என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.

இதையடுத்து, ஷாம் சுந்தர், ஜெகதீஷ் ஆகியோரிடம் விசாரணை நடத்தியபோது, ​​2020-2021-ம் ஆண்டு துரைப்பாக்கத்தில் உள்ள தனியார் ஐடி நிறுவனத்தில் ஒன்றாக வேலை பார்த்தபோது நண்பர்களாகிவிட்டதாகவும், அதன் பிறகு இருவரும் போதைப்பொருள் விற்பனை செய்து அதிக பணம் சம்பாதித்ததாகவும் கூறியுள்ளனர். 

இதுமட்டுமின்றி, ஜெகதீஷ் பஸ் அல்லது ரயிலில் மும்பை பெங்களூரு சென்று ஷாம் சுந்தருடன் சேர்ந்து குறைந்த விலைக்கு மெத்தாம்பெட்டமைன் வாங்கி தரமணி, துரை பாக்கம் பகுதிகளில் உள்ள ஐடி ஊழியர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்து வந்ததும் தெரியவந்துள்ளது. இதனிடையே, ஷாம் சுந்தர், ஜெகதீஷ் ஆகிய இருவரிடமிருந்தும் சுமார் 5.5 கிராம் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருளை போலீஸார் பறிமுதல் செய்து, அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!