பிப்ரவரி 17-இல் விண்ணில் பாயும் GSLV-F14.. செயற்கைகோள் பற்றி தெரியுமா..?

 

இன்சாட் 3டிஎஸ் (INSAT-3DS) செயற்கைக்கோளுடன் ஜிஎஸ்எல்வி (GSLV) எஃப்-14 ராக்கெட் வரும் 17-ம் தேதி விண்ணில் செலுத்தப்பட உள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. வானிலை ஆய்வுக்கான அதிநவீன இன்சாட்-3டிஎஸ் (INSAT-3DS)  எனும் செயற்கைக்கோளை இஸ்ரோ வடிவமைத்துள்ளது. இது ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து ஜிஎஸ்எல்வி-எஃப்14 (GSLV-F14) ராக்கெட் மூலம் 17-ம் தேதி விண்ணில் செலுத்தப்பட உள்ளது.

 

இதில் உள்ள 6 இமேஜிங் சேனல்கள் உள்பட 25 விதமான ஆய்வுக் கருவிகள், புவியின் பருவநிலை மாறுபாடுகளை கண்காணித்து வானிலைத் தகவல்களை துல்லியமாக வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

INSAT-3DS பணியானது இஸ்ரோ மற்றும் இந்திய வானிலை ஆய்வுத் துறைக்கு இடையே ஒத்துழைப்பு வழங்க உள்ள கருவி ஆகும். இது காலநிலை கண்காணிப்பு செயற்கைக்கோள்களின் ஒரு பகுதியாகும், இது காலநிலை சேவைகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க