undefined

நீதியை நிலைநாட்டிய இஸ்ரேல்.. ஹிஸ்புல்லா தலைவரை கொன்றதற்கு ஜோ பைடன் வரவேற்பு!

 

லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா கிளர்ச்சி அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா, தலைநகர் பெய்ரூட்டில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் நேற்று கொல்லப்பட்டார். இந்நிலையில், நஸ்ரல்லாவின் மரணத்திற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வரவேற்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பைடன் வெளியிட்டுள்ள அறிக்கையில், நஸ்ரல்லாவின் பயங்கரவாதம் காரணமாக இது பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவதற்கான நடவடிக்கையாகும்.

பயங்கரவாதத்தால் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான அமெரிக்கர்கள், இஸ்ரேலியர்கள் மற்றும் லெபனான் குடிமக்கள் அனைவரும் இப்போது நஸ்ரல்லாவின் மரணத்தால் நீதியளிக்கப்படுகிறார்கள். ஹிஸ்புல்லா , ஹமாஸ், ஹவுதி மற்றும் ஈரானிய பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக இஸ்ரேல் நடவடிக்கை எடுக்கும். 

இந்த நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா எப்போதும் ஆதரவளிக்கும் என்றார். இதனிடையே லெபனானில் நடைபெற்று வரும் வன்முறை தாக்குதல்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் இஸ்ரேலை வலியுறுத்தியுள்ளார். இதற்கிடையில், மற்றொரு அரசியல் படுகொலைக்காக இஸ்ரேலை ரஷ்யா விமர்சித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!