undefined

 லெபனான் மீது இஸ்ரேல் சரமாரி ஏவுகணை தாக்குதல்... 20 பேர் பலி; 66 பேர் படுகாயம்!

 
 லெபனான் மீது இஸ்ரேல் சரமாரி ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில் 20 பேர் பலியாகினர். மேலும் 66 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது.காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலுக்குள் நுழைந்து கடந்த ஆண்டு தாக்குதல் நடத்தினர். இதில் 1,200 பேர் பலியாகினர். இதனையடுத்து காசா மீது இஸ்ரேல் போர் தொடுத்தது. கடந்த ஓராண்டுக்கும் மேலாக இந்த போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

இதில் ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவாக லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா மற்றும் ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் செயல்படுகின்றனர். இவர்கள் இஸ்ரேல் மீது அடிக்கடி தாக்குதல் நடத்துகின்றனர். இதனால் ஆத்திரம் அடைந்த இஸ்ரேல் அவர்களது முகாமை குறிவைத்தும் தாக்குதல் நடத்துகிறது. அந்தவகையில் லெபனான் தலைநகர் பெய்ரூட் மீது இஸ்ரேல் சரமாரி ஏவுகைண தாக்குதல் நடத்தியது.

இந்த தாக்குதலில் அங்குள்ள பல அடுக்குமாடி குடியிருப்புகள் தரைமட்டமாகின. மீட்பு படையினர் அங்கு விரைந்து கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் இறங்கினர். அப்போது 20 பேர் பிணமாக கண்டெடுக்கப்பட்டனர். படுகாயம் அடைந்த 66 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது