undefined

’இஸ்கான்’ அமைப்பு தடை செய்ய மறுப்பு.. டாக்கா உயர்நீதிமன்றம் அதிரடி!

 

வங்கதேசத்தை சேர்ந்த இந்து மத அமைப்பின் தலைவர் சின்மய் கிருஷ்ண தாஸ், அந்நாட்டின் தேசியக் கொடியை அவமதித்த குற்றச்சாட்டில் சமீபத்தில் கைது செய்யப்பட்டார். அவர் கைது செய்யப்பட்டதற்கு எதிராக வங்கதேசத்தில் உள்ள இந்து அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில், வங்கதேசத்தில் 'இஸ்கான்' அமைப்பின் செயல்பாடுகளை அரசு தடை செய்ய வேண்டும் என்றும், அங்குள்ள சத்கிராம், ரங்பூர், தினாஜ்பூர் பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் டாக்கா உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் மோனிருதீன் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதி ஃபரா மஹ்பூப், நீதிபதி தேபாஷிஷ் ராய் சவுத்ரி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், வங்கதேசத்தில் 'இஸ்கான்' அமைப்பை தடை செய்ய மறுத்துவிட்டனர். அதே சமயம் வங்கதேசத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதில் அரசு கவனமாக இருக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!